search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    போற்றி பாடல் பாடி... நவராத்திரி கொண்டாடுவோம்!
    X

    போற்றி பாடல் பாடி... நவராத்திரி கொண்டாடுவோம்!

    • நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
    • ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    நவம் என்றால் ஒன்பது. ராத்ரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்கள் 10வது நாள் விஜயதசமி என்று கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

    நவராத்திரி பூஜை தொடங்கும்போது முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும். சில வீடுகளில் அமாவாசை அன்று மாலையே எடுத்து வைத்து விடுவார்கள். அடுத்ததாக, ஒரு பித்தளை சொம்பில் நூல் சுற்றி, மாவிலை தேங்காய் வைத்துக் கலசம் வைக்க வேண்டும்.

    நீர் ஊற்றும்போது அது புனிதத்துவம் அடைவதற்காக நதிகளை நினைத்து, கலசத்தில் உள்ள நீரில் கங்கையும் யமுனை தானும் கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்துவும் காவிரிதானும் எழுந்தருளி இறையருள் சேர்ப்பீர் என்று சொல்லிக் கொண்டே ஊற்ற வேண்டும்.

    அடுத்ததாக ஒரு தலைவாழை இலையில் அரிசியைப் பரப்பி மனைப்பலகைமேல் வைத்து அதன் மேல் கலசத்தை வைத்து தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அம்பிகை மேடையில் வைக்க வேண்டும். கொலுப்படிகளுக்கு வடக்குப் புறமாக அதாவது படிகளின் இடப்பாகம் வைத்தல் முறையாகும். இப்படி அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

    விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். அதற்குரிய பொருட்களான மஞ்சள் பொடி, சந்தனம், உதிரிமலர், ஊதுவத்தி, பஞ்சுதிரி, கற்பூரம், வெல்லம், அரிசி, தயிர், தேன், குங்குமம், புஷ்பமாலை, வெற்றிலைப்பாக்கு, சாம்பிராணி, நல்லெண்ணெய், அரிசி, வாழைப்பழம், தேங்காய், பூஜைக்குரிய மணி, தாம்பாளம், கற்பூர தட்டு, பஞ்சபாத்ர உத்தரணி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    முதலில் பிள்ளையாருக்கு இந்த 16 போற்றிகளைச் சொல்லவும்.

    ஓம் அகர முதல்வா போற்றி!

    ஓம் அணுவிற்கணுவாய் போற்றி!

    ஓம் ஆனை முகத்தோய் போற்றி!

    ஓம் இந்தின் இளம்பிறை போற்றி!

    ஓம் ஈடிலாத் தெய்வமே போற்றி!

    ஓம் உமையவள் மைந்தா போற்றி!

    ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி!

    ஓம் எருக்கினில் இருப்பாய் போற்றி!

    ஓம் ஐங்கரனே போற்றி!

    ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி!

    ஓம் கற்பக் களிறே போற்றி!

    ஓம் பேழை வயிற்றோய் போற்றி!

    ஓம் பெரும்பாரக் கோட்டாய் போற்றி!

    ஓம் வெள்ளிக்கொம்பா விநாயகா போற்றி!

    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி!

    ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி!

    ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

    9 நாட்களுக்குரிய போற்றி பாடல்கள் வருமாறு:

    முதல் நாளுக்குரிய போற்றி

    ஓம் பொன்னே போற்றி!

    ஓம் மெய்ப்பொருளே போற்றி!

    ஓம் போகமே போற்றி!

    ஓம் ஞானச் சுடரே போற்றி!

    ஓம் பேரின்பக் கடலே போன்றி!

    ஓம் குமாரியே போற்றி!

    ஓம் குற்றங்களைவாய் போற்றி!

    ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!

    ஓம் பேரருட்கடலே போற்றி!

    ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!

    ஓம் அருட்கடலே போற்றி!

    ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!

    ஓம் இருளகற்றுவாய் போற்றி

    ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!

    ஓம் ஈயும் தயாபரி போற்றி!

    ஓம் மங்கள நாயகியே போற்றி!

    இப்படி அர்ச்சனை முடிக்கவும்.

    இரண்டாவது நாள் போற்றி

    ஓம் வளம் நல்குவாய் போற்றி

    ஓம் நலந்தரும் நாயகி போற்றி

    ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி

    ஓம் அறத்தின் வடிவோய் போற்றி

    ஓம் மின் ஒளி அம்மா போற்றி

    ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி

    ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி

    ஓம் எரம்பன் தாயானவளே போற்றி

    ஓம் எங்களின் தெய்வமே போற்றி

    ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி

    ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி

    ஓம் சூளா மணியே போற்றி

    ஓம் சுந்தர வடிவே போற்றி

    ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

    ஓம் நட்புக்கரசியே போற்றி

    ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!-

    மூன்றாம் நாள் போற்றி

    ஓம் அறிவினுக்கறிவேபோற்றி

    ஓம் ஞானதீபமேபோற்றி

    ஓம் அருமறைப் பொருளேபோற்றி

    ஓம் ஆதிமூலமாய் நின்றவளேபோற்றி

    ஓம் புகழ்தரும் புண்ணியளேபோற்றி

    ஓம் நறும்பாகின் சுவையே போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவோய் போற்றி

    ஓம் பரமனின் சக்தியேபோற்றி

    ஓம் பாபங்கள் களைவாய்போற்றி

    ஓம் அன்பெனும் முகத்தவளேபோற்றி

    ஓம் அகிலத்தின் காப்பே போற்றி

    ஓம் செம்மேனியளேபோற்றி

    ஓம் செபத்தின் விளக்கமேபோற்றி

    ஓம் தானியந் தருவாய் போற்றி

    ஓம் கல்யாணியம்மையேபோற்றி

    நான்காவது நாள் போற்றி

    ஓம் கருணை வடிவேபோற்றி

    ஓம் கற்பகத் தருவேபோற்றி

    ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி

    ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி

    ஓம் கரும்பின் சுவையேபோற்றி

    ஓம் கார்முகில் மழையேபோற்றி

    ஓம் வீரத்திருமகளே போற்றி

    ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி

    ஓம் பகைக்குப் பகையேபோற்றி

    ஓம் ஆவேசத் திருவேபோற்றி

    ஓம் தீமைக்குத் தீயேபோற்றி

    ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி

    ஓம் நாரணன் தங்கையேபோற்றி

    ஓம் அற்புதக் கோலமேபோற்றி

    ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி

    ஓம் புகழின் காரணியேபோற்றி

    ஓம் காக்கும் கவசமேபோற்றி

    ஓம் ரோகிணி தேவியேபோற்றி

    ஐந்தாம் நாள் போற்றி

    ஓம் வீரசக்தியே போற்றி

    ஓம் திரிசூலியே போற்றி

    ஓம் கபாலியே போற்றி

    ஓம் தாளிசினியே போற்றி

    ஓம் கௌரி தேவியே போற்றி

    ஓம் உத்தமத் தாயே போற்றி

    ஓம் தர்மம் காப்பவளே போற்றி

    ஓம் உதிரத்தின் தலைவியே போற்றி

    ஓம் மெய்ஞான விதியே போற்றி

    ஓம் தாண்டவத் தாரகையே போற்றி

    ஓம் போற்றுவோர் துணையே போற்றி

    ஓம் பச்சைக் காளியே போற்றி

    ஓம் பவள நிறத்தினாய் போற்றி

    ஓம் ஆகாய ஒளியே போற்றி

    ஓம் பூதங்கள் உடையோய் போற்றி

    ஓம் காளிகாதேவி சக்தியே போற்றி

    ஆறாம் நாள் போற்றி

    ஓம் பொன்னரசியே போற்றி

    ஓம் நவமணி நாயகியே போற்றி

    ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

    ஓம் சிங்கார நாயகியே போற்றி

    ஓம் செம்பொன் மேனியளே போற்றி

    ஓம் மங்காத ஒளியவளே போற்றி

    ஓம் சித்திகள் தருவாய் போற்றி

    ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

    ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

    ஓம் மகாமந்திர உருவே போற்றி

    ஓம் மாமறையுள் பொருளே போற்றி

    ஓம் ஆநந்த முதலே போற்றி

    ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

    ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

    ஓம் மாகேஸ்வரியே போற்றி

    ஓம் மகா சண்டிகையே போற்றி

    ஏழாம் நாள் போற்றி

    ஓம் மெய்த் தவமே போற்றி

    ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி

    ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி

    ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி

    ஓம் அகிலலோக நாயகி போற்றி

    ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி

    ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி

    ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி

    ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி

    ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி

    ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி

    ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி

    ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி

    ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி

    ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

    ஓம் சாம்பவி மாதே போற்றி

    எட்டாம் நாள் போற்றி

    ஓம் வேத மெய்பொருளே போற்றி

    ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி

    ஓம் அண்டர் போற்றும் அருட் பொருளே போற்றி

    ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி

    ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

    ஓம் மாயோனின் மனம் நிறைந்தவனே போற்றி

    ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி

    ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி

    ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி

    ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி

    ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி

    ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி

    ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி

    ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி

    ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி

    ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி! போற்றி!!

    ஒன்பதாம் நாள் போற்றி

    ஓம் ஓங்காரத்துப் பொருளே போற்றி

    ஓம் ஊனாகி நின்ற உத்தமியே போற்றி

    ஓம் படைத்தோன் பாகம் பிரியாய் போற்றி

    ஓம் அடியவர்க்கு மங்களம் அருள்வாய் போற்றி

    ஓம் முக்கோணத்துள் உள்ள மூர்த்தமே போற்றி

    ஓம் ரீங்காரம் தன்னில் இருப்பவளே போற்றி

    ஓம் நாற்பத்து முக்கோண நாயகியே போற்றி

    ஓம் சொற்பொருள் சுவைதனைத் தந்தாய் போற்றி

    ஓம் ஆறாது தத்துவம் அருளினாய் போற்றி

    ஓம் பளிங்கு ஒளியாய் நின்ற பரமே போற்றி

    ஓம் ஓசை விந்துநாத உட்பொருளாய் போற்றி

    ஓம் அகண்ட பூரணி அம்மா போற்றி

    ஓம் உண்ணும் சிவயோக உத்தமியே போற்றி

    ஓம் பண் மறைவேதப் பாசறையே போற்றி

    ஓம் மாகேஸ்வரியே மங்கள உருவே போற்றி

    ஓம் சாம்பவி சங்கரித் தேவியே போற்றி! போற்றி!!

    Next Story
    ×