search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் எஸ்இ2 வெளியீட்டு தேதி மற்றும் முழு விவரம்
    X

    ஐபோன் எஸ்இ2 வெளியீட்டு தேதி மற்றும் முழு விவரம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதன் வெளியீடு குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.
    புதுடெல்லி:

    ஐபோன் எஸ்இ2 வெளியீடு குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய ஐபோன் எஸ்இ வெளியீடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2018) வெளியிடப்படலாம் என சீன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய ஐபோன் எஸ்இ2 முந்தைய மாடலை போன்ற வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மெட்டல் பேக், ஃபிரேம், முன்பக்க பெசல்கள், ஹோம் பட்டன் உள்ளிட்டவற்றுடன் பெரிய 4.2 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் எஸ்இ 2 முன்பக்கம் இப்போதைய டிரெண்ட் பின்பற்றும் வகையில் சற்றே மெல்லிய பெசல்கள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    எனினும் ஃபேஸ் ஐடி மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு வழங்கப்படாது என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோன் A10 ஃபியூஷன் சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி அல்லது 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் ஐபோன்களை டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்ததில்லை.

    அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ2 மென்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த டெவலப்பர்களுக்கான விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற வகையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களை வழங்கியிருக்கும் வலைத்தளம் லீக்ஸ் மற்றும் தகவல்களை முடிந்த வரை உண்மையாகலாம் என்றாலும் இதுவரை ஆப்பிள் சார்பில் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை. 

    இதேபோன்று பிரபல ஆப்பிள் டிப்ஸ்டரான மிங் சி கியோ ஐபோன் எஸ்இ2 இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.
    Next Story
    ×