search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018 - 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை
    X

    ஐபிஎல் 2018 - 102 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை

    கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை துல்லியமான பந்துவீச்சால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. #IPL2018 #KKRvMI
    ஐபிஎல் தொடரின் 41-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். யாதவ் 36 ரன்னிலும், லெவிஸ் 18 ரன்னிலும், ரோகித் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.

    விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
    அவரை தொடர்ந்து இறுதியில் ஆடிய பென் கட்டிங் 9 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்.



    இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கொல்கத்தா அணி 211 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் ந்ரேன் கிறிஸ் லின் ஆகியோர் களமிறங்கினர்.

    மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சு மற்றும் சிறந்த பீல்டிங்கில் கொல்கத்தா அணி சிக்கியது. இதனால் அந்த அணியில் யாரும் நிலைத்து நிற்கவில்லை. கிறிஸ் லின், நிதிஷ் ரானா ஆகியோர் மட்டுமே 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சரியாக ஆடவில்லை

    இதனால் கொல்கத்தா அணி 18.1 ஓவரில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக தோற்றது.

    மும்பை அணி சார்பில் குருனால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மெக்லெகன், பும்ரா,  மயங்க் மார்கண்டே, பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #IPL2018 #KKRvMI
    Next Story
    ×