search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parliment election"

    • டெல்லியில் உள்ள 7 தொகுதிக்கும் ஒரேகட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று டெல்லி மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக ராகுல் காந்தி பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பயணத்தின்போது மக்களுடன் அவர் உரையாடினார். மக்களும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

    • பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
    • ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆறாம் கட்டமாக நாளை மறுதினமும், 7வது கட்டமாக ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.

    உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

    தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.

    • பாராளுமன்ற தேர்தலன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும்.
    • காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் என அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25-ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இதற்கிடையே, வரும் 25-ம் தேதி தலைநகர் டெல்லியில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் அன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • ராஞ்சியில் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார்.

    டேராடூன்:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7-வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 6வது கட்ட தேர்தலில் ராஞ்சி தொகுதியும் இடம்பிடித்துள்ளது.

    இந்நிலையில், ராஞ்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு சென்றார். அப்போது அவர் ஜார்க்கண்ட் பெண்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

    • நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இதனால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

    தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:


    நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும் என அறுவுறுத்தியுள்ளது.

    மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

    இந்திய அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டு விடும், விற்பனை செய்யப்பட்டு விடும் என்பது போன்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

    சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

    மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • 2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது.
    • குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இது மனிதர்களுக்கு இடையிலான அழகுப் போட்டி அல்ல. நாங்கள் கட்சி சார்ந்த ஜனநாயகம். எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கும் என்பது கேள்வி.

    கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்கும். கட்சி தனது தலைவரை தேர்ந்தெடுத்து அந்த தலைவர் பிரதமராகிறார்.

    2004-ம் ஆண்டில் மன்மோகன் சிங்கின் பெயர் 4 நாட்களில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை 4 நாட்கள் கூட ஆகாது. 2 நாளில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். எம்.பி.க்கள் கூடி தேர்வு செய்வார்கள். இது ஒரு செயல்முறை.

    குறுக்கு வழிகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் திமிர் பிடித்தவர்கள் அல்ல. சில மணி நேரத்தில் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும். மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர் பிரதமர். 2004-ம் ஆண்டில் எப்படி நடந்ததோ அப்படியே நடக்கும் என தெரிவித்தார்.

    • ஒடிசாவின் பூரி நகரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி பங்கேற்றார்.
    • தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என கேள்வி எழுப்பினார்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தல் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்குவதற்கான தேர்தல். இந்தத் தேர்தல் ஜெகந்நாதரின் பெருமையையும் சுயமரியாதையையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கான தேர்தல்.

    நாட்டிலேயே மிகவும் வளமான, கனிம வளம் நிறைந்த மாநிலமாக ஒடிசா இருப்பினும் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். மக்களின் ஏழ்மையைப் போக்க வேண்டுமானால் பிரதமர் மோடிக்கு வாக்களித்து அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும்.

    நவீன் பட்நாயக்குக்கு நீங்கள் 25 ஆண்டுகள் கொடுத்தீர்கள். 25 ஆண்டு கால அவரது ஆட்சியில் சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு என அனைத்தும் தடம் புரண்டுள்ளன. நவீன் பாபுவின் அரசு போலி அரசு.

    பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்குகிறார். நவீன் பாபு, அதன் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டி ஏழைகளுக்கு வழங்குகிறார்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி ஒடிசாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். மீனவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும். 1.5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.

    ஒடிசா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க 75 இடங்களில் பா.ஜ.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சி அமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல் மந்திரியாக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
    • வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

    வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான

    வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

    அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.

    • தனி நாடு என யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது.
    • தென் மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தனிநாடு என்று யாராவது சொன்னால் அது மிகவும் ஆட்சேபணைக்கு உரியது. தற்போது இந்த நாட்டை பிரிக்கவே முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் உயரிய தலைவர் ஒருவர் வடஇந்தியா மற்றும் தென்னிந்தியாவை பிரிப்பது பற்றி பேசினார். காங்கிரஸ் கட்சி அதை மறுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கப் போகிறது.

    பெரும்பான்மை பெற முடியாததற்கான சாத்தியக்கூறுகள் எதையும் காணவில்லை. பலம் வாய்ந்த 60 கோடி பயனாளிகள் பிரதமர் மோடியுடன் நிற்கின்றனர். அவர்களுக்கு ஜாதி, வயது, பிரிவு கிடையாது.. இந்தச் சலுகைகள் பெற்ற அனைவருக்கும் நரேந்திர மோடி தெரியும்

    பிளான் ஏ வெற்றி பெற 60 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு இருக்கும்போது மட்டுமே திட்டம் பிளான் பி திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பிரதமர் மோடி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவார் என உறுதியாக நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
    • ஜாமினில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த 10-ந்தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து டெல்லியில் மக்களவை தேர்தலைச் சந்திக்கின்றன.

    இந்நிலையில், டெல்லி சாந்தினி சவுக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி.அகர்வாலை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நான் சிறையிலிருந்து நேராக உங்களிடம் வந்துள்ளேன். பா.ஜ.க.வினர் என்னை சிறையில் அடைத்தபோது உங்களைப் பிரிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

    நான் ஒரு சாதாரண நபர். நமது ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி மற்றும் பஞ்சாபில் மட்டுமே ஆட்சி செய்துவரும் சிறிய கட்சியாகும். என்னை எதற்காக கைது செய்தார்கள் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் செய்த தவறு என்ன?

    பா.ஜ.க.வைப் பொறுத்தவரை நான் ஏழை மக்களுக்காக தரமான பள்ளிகள், இலவச கல்வி, 24 மணி நேர மின்சாரம் உள்ளிட்டவற்றை கொடுத்ததுதான் நான் செய்த தவறாகும். இப்பொழுது நான் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

    • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஹைதராபாத் தொகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் நடவடிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அவர், "நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

    மாதவி லதா தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற தேர்தலில் இன்று 4-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பா.ஜ.க. வேட்பாளர் சோதனை செய்தார்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

    இவர் தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×