என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார்.

    டிராகன் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவிருந்தார். அந்த படத்தை ஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் அரசன் படத்தில் சிம்பு நடிக்க தொடங்கினார்.

    இதனால் அஸ்வத் மாரிமுத்து படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதன்மூலம் சிம்பு படம் விரைவில் தொடங்கும் என்று அஸ்வத் மாரிமுத்து அப்டேட் கொடுத்துள்ளார்.

    • ‘மீசைய முறுக்கு-2’ படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஷ்பு சுந்தர் தயாரிப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்திருந்த படம் மீசைய முறுக்கு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் ஹிப்ஹாப் தமிழா ஆதியே இயக்கி, இசையமைக்கிறார்.

    இப்படத்தையும் குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரின்படி படம் 1980-களில் நடக்கும் ஒரு இசைக் கலைஞனின் கதை மற்றும் தற்போதைய காலகட்டம் என இரண்டு காலக்கட்டங்களில் பயணிக்கிறது. இதில் மறைந்த நடிகர் விவேக்கின் குரல் இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் கோடையில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடல் மார்ச் 4ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • ரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார்

    கதை:

    மீன்பிடி படகு மெக்கானிக்காக வேலை பார்க்கும் சரத்குமார், வெளிப்படையாக சாதாரண வாழ்க்கை வாழும் மனிதராக இருந்தாலும், மறுபக்கம் போதைப் பொருள் விற்பனை மற்றும் ஆயுத கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான தேவிகா சதீஷ், கல்லூரியில் உடன் படிக்கும் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார்.

    சமூக மற்றும் பொருளாதார வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஏற்க மறுக்கும் சரத்குமார், இளைஞனை கடத்தி ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். உயிர் தப்பிக்க போராடும் நாயகன் தப்பித்தாரா? அல்லது கடலே அவரது முடிவை தீர்மானித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்:

    அப்பா கதாபாத்திரம் சரத்குமாருக்கு புதியது அல்ல. பாசமும் கொடூரமும் கலந்த மனிதராக வேறுபாடு காட்ட முயற்சித்திருந்தாலும், அவர் ஏற்கனவே நடித்த பல வேடங்களின் சாயல் இதில் தென்படுகிறது. தோற்ற மாற்றம் இருந்தாலும் கதாபாத்திரத்தின் தீவிரம் முழுமையாக வெளிப்படவில்லை. இருந்தாலும் அனுபவ நடிகராக தனது பங்கை நம்பகமாக செய்து முடித்திருக்கிறார்.

    இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், உயிர் அச்சத்தில் இருக்கும் மனிதனின் பதட்டத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் சற்றே ஒரே மாதிரியான நடிப்பில் பயணிக்கிறார். சரத்குமாரின் மகளாக வரும் தேவிகா சதீஷ் குறைந்த காட்சிகளிலேயே கவனம் ஈர்த்து தனது வேலையை நிறைவு செய்திருக்கிறார்.

    இயக்கம்:

    ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு மீன்பிடி படகை மையமாக வைத்து, இரண்டு கதாபாத்திரங்களின் மன மற்றும் உடல் ரீதியான மோதலை கொண்டு முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன். குறைந்த கதாபாத்திரங்களுடன் தீவிரமான திரில்லர் அனுபவம் கொடுக்க முயற்சி இருந்தாலும், அதற்கான அழுத்தம் திரைக்கதையில் முழுமையாக உருவாகவில்லை.

    போதைப் பொருள் கடத்தல் போன்ற பெரிய குற்றங்களில் ஈடுபடும் மனிதன் அனைத்தையும் தனியாக செய்வது போன்ற காட்சிகள் லாஜிக் குறைகளை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் உயிர் காக்க போராடும் நாயகன், பின்னர் வில்லனை காப்பாற்ற முயல்வது போன்ற திரைக்கதை மாற்றங்களும் உணர்ச்சி தாக்கத்தை குறைக்கிறது. திடீர் காதலை விட தந்தை-மகள் பாசம் பெரியது என்பதை உணர்த்தும் காட்சி படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு:

    ஆனந்த் ஒளிப்பதிவில் படகின் உட்புறத்தில் குறுகிய இடங்களில் படமாக்கப்பட்ட சில காட்சிகள் கவனம் ஈர்க்கின்றன. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது.

    மாலைமலர் ரேட்டிங் : 2.5 / 5

    'யூத்' படத்தின் முதல் சிங்கிள் `முட்ட கலக்கி' பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார்.

    'அசுரன்', 'விடுதலை 2' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'யூத்'. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.

    `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    'யூத்' படத்தின் முதல் சிங்கிள் `முட்ட கலக்கி' பாடலை கென் கருணாஸ் எழுதி பாடியுள்ளார். இந்தப் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் இந்தப் பாடலை வைத்து அதிக எண்ணிக்கையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து 'பறந்தேனே பெண்ணே' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இந்த படத்தின் 'ஆச புள்ள' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 

    • விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.

    விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படியும், மாலையில் கொடவா முறைப்படியும் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் வெளியிட்டதிருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்டிங் ஆனது.

    இந்நிலையில், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண புகைப்படங்கள் குறித்த பதிவு ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவாக மாறியுள்ளது.

    விராட் கோலியின் டி20 உலகக்கோப்பை வெற்றி குறித்த பதிவை விட ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு அதிக லைக்குகள் பெற்று இந்த சாதனையை படைத்துள்ளது.

    கோலி பகிர்ந்த புகைப்படம் 22.9 மில்லியன் லைக்குகளை கடந்து நிலையில், ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா பகிர்ந்த திருமண புகைப்படம் 24.4 மில்லியன் லைக்குகளை கடந்து ஆசியாவிலேயே அதிக லைக் வாங்கிய புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    வருகிற மார்ச் 4-ந்தேதி விஜய் தேவரகொண்டாவுக்கும்-ராஷ்மிகாவுக்கும் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட முறையில் நடைபெற இருக்கிறது. விழாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் இந்திய திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்த இருக்கின்றனர்.

    இந்த பாடலிலும் இருவரும் திருமணம் செய்து புது வாழ்வை தொடங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர்.

    கீதா கோவிந்தம், புஷ்பா ஆகிய படங்களில் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர். தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்தார்.

    ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது முதலே அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர்.

    இருவரும் வெளிப்படையாக தங்களது காதலை அறிவிக்காதபோதும், பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டனர்.

    அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை.

    இந்த நிலையில் மிக சமீபத்தில் அவர்களது திருமணம் பற்றிய தகவல் வெளிவந்தது. விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரது திருமணம் நேற்று முன் தினம ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனை அருகேயுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது.

    திருமண வரவேற்பு ஐதராபாத்தில் மார்ச் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சினிமா, அரசியல் பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழலில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணைந்து நடித்து வரும் ரணபலி படத்தின் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

    இந்த பாடலிலும் இருவரும் திருமணம் செய்து புது வாழ்வை தொடங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் கவனம் பெற்று வருகிறது.

    விஜய் தேவரகொண்டாவின் டாக்சிவாலா படத்தை இயக்கிய ராகுல் சாங்கிருத்யாயன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

    'தி மம்மி' புகழ் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    செப்டம்பர் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.  

    • இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

    சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், அபர்ணதி அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெஞ்சென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்குகிறார். அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    ஏசி புரொடக்சன் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அரசியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிக்கும்வகையில் உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்ப்பு அதிகரித்துள்ளது. 

    • இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
    • தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

    மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்த படம் தான் 'காந்தி டாக்ஸ்'.

    வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவான காந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கி உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    'காந்தி டாக்ஸ்' கடந்த மாதம் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், 'காந்தி டாக்ஸ்' படம் வருகிற 6-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். 

    • திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு.
    • பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும்.

    வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக 'வேல்ஸ் நட்சத்திரா 2026' என்ற கலாச்சார விழா நடைபெற்றது. விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    140 கல்லூரிகளைச் சேர்ந்த 1,150 மாணவர்கள் விழாவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

    முதல் நாள் நிகழ்வில் இயக்குநர் பிரேம் குமார், டூரிஸ்ட் பேமலி திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து மற்றும் ஹர்ஷத் கான், இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், பாடகி ஷிவாங்கி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் நடிகர் தனுஷ், நடிகைகள் பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பங்கேற்றனர்.

    நடிகர் தனுஷ் விழாவில் பேசியதாவது:-

    ''நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன். எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு உண்டு. என் முதல் படம் துள்ளுவதோ இளமை இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன்.

    பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும். இதை பின்பற்றுங்கள் என்றார்.

    விழாவில் பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், "என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் நடிப்பில் எடுக்க இருக்கும் வட சென்னை 2 தான் என்றே கூறலாம் அதேபோல் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது" என தெரிவித்தார். டி.ஜே. தீபிகா இசையால் விழாவிற்கு மேலும் உற்சாகம் சேர்த்தார். இறுதியாக வானில் வெடித்த வண்ணமயமான பட்டாசுகள் இரவை ஒளிரச் செய்து, விழாவிற்கு சிறப்பான நிறைவாக அமைந்தது.

    • ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
    • ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பவனுதாயி என்கிற பெயரில் தாய் கிழவியாக ஊரில் வலம் வருபவர் ராதிகா. அங்குள்ளவர்களுக்கு வட்டிக்கு விட்டு மிரட்டி வட்டி வசூலில் ஈடுபட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கிழவி எப்போது இறக்கும் என ஊரே காத்திருக்கிறது. ராதிகாவிற்கு அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன்கள், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஒற்றை பெண்மணியாக பிள்ளைகளை வளர்த்து வந்த ராதிகாவிற்கு திடீரென உடல்நலம் மோசமாகிறது. இன்னும் சில நாட்களில் ராதிகா இறந்து விடுவார் என்று ஊரே காத்திருக்கிறது. அப்போது, ராதிகா 160 சவரன் சேர்த்து வைத்துள்ளது மகன்களுக்கு தெரியவருகிறது. பாசத்தால் இல்லாவிட்டாலும், நகை சொத்துக்காகவாவது தாய் ராதிகாவை காப்பாற்ற வேண்டும் என மெனக்கிடுகிறார்கள்.

    இறுதியில் தாய் கிழவி உயிர் பிழைத்தாரா? அந்த 160 சவரன் நகை என்னவாயிற்று? என்பது படத்தின் மீதிக்கதை.

    இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், 'தாய் கிழவி' படம் நேற்று வெளியான முதல் நாளே நாடு முழுவதும் ரூ.2 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படும் நிலையில், முதல் நாளே இரண்டரை கோடி ரூபாய் குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • தனுஷின் ‘கர’ படம் ஏப்ரல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த இப்படம் தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

    நடிகர் தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் 'கர'. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 56-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

    இந்த நிலையில், தனுஷின் 56-வது படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். வரலாறு மற்றும் அரசியல் சார்ந்த இப்படம் தனது சினிமா பயணத்தில் மிகப்பெரிய படமாக அமையும் என அவர் கூறியுள்ளார். 

    • ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    • வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

    தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்திற்கு 'கர' என பெயரிடப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

    இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் 'கர' திரைப்படம் வருகிற ஏப்ரம் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×