search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐபோன் எஸ்.இ.
    X
    ஐபோன் எஸ்.இ.

    குறைந்த விலை 5ஜி ஐபோன் வெளியீட்டு விவரம்

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபோன் எஸ்.இ. மாடலின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 3 மாடல் வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள், புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலை இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. 

    இத்துடன் புதிய 27 இன்ச் ஐமேக், எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் கொண்ட டாப் எண்ட் மேக் மினி மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்.இ. 3 மாடலில் ஏ14 அல்லது ஏ15 பயோனிக் சிப்செட் மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     ஐபோன் எஸ்.இ.

    ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய ஐபோன் எஸ்.இ. 2 போன்றே காட்சியளிக்கும். மேலும் டச் ஐ.டி. சென்சார் ஹோம் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2022 ஐபோன் எஸ்.இ. குறைந்த விலை 5ஜி ஐபோனாக இருக்கும். இதன் விலை 399 டாலர்களில் துவங்கும் என தெரிகிறது. இதுமட்டுமின்றி ஐபோன் எஸ்.இ. பிளஸ் பெயர் கொண்ட மாடலும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

    கடந்த வாரம் வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்.இ. 4 மாடல் 6 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, பேஸ் ஐ.டி. வசதி, பன்ச் ஹோல் செல்பி கேமரா, 5ஜி கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மேலும் இந்த மாடல் 2024 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

    Next Story
    ×