search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள் பிக்சல் 6 சீரிஸ்
    X
    கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    பிக்சல் 6 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகின்றன.


    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுள் நிறுவனத்தின் டென்சார் சிப்செட் பயன்படுத்துகின்றன. 

    பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அலுமினியம் பிரேம் மற்றும் மேட் பினிஷ் செய்யப்பட்டு இருக்கும். பிக்சல் 6 ப்ரோ மாடல் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    அதன்படி பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120x1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 50 எம்பி பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×