search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் 11
    X
    ஐபோன் 11

    இந்தியாவில் ஐபோன் 11 விலை விரைவில் குறைப்பு

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மாடல் விலை இந்தியாவில் விரைவில் குறைய இருப்பதாக தகவல் வெளியகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

    மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள் தனது ஃபிளாக்ஷிப் ஐபோன் 11 மாடலை சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளது. முன்னதாக இந்தியாவில் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் ஐபோன் 11 மாடலும் இங்கு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    இந்தியாவில் தற்சமயம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 11 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 11 விலையை இந்தியாவில் இன்னும் குறைக்கவில்லை. இந்தியாவில் ஐபோன் 11 உற்பத்தியை ஊக்குவித்து விரைவில் ஏற்றுமதி செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் ஐபோன் 11 விலை குறைக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் ஐபோன் 11 உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு யூனிட்டிற்கும் 22 சதவீத இறக்குமதி வரியை சேமிக்க முடியும். இறக்குமதி வரி சேமிப்பை கருத்தில் கொண்டு ஐபோன் 11 விலை இந்தியாவில் குறைக்கப்படலாம் என தெரிகிறது. 

    ஐபோன் 11

    ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1792x828 பிக்சல் LCD 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
    - A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
    - 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள்
    - ஐ.ஒ.எஸ். 13
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ
    - 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - ட்ரூ டெப்த் கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - லித்தியம் அயன் பேட்டரி
    - Qi வயர்லெஸ் சார்ஜிங்

    Next Story
    ×