என் மலர்
தொழில்நுட்பம்

கூகுள் பிளே ஸ்டோர்
பயனர் விவரங்களை திருடும் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கண்டுபிடிப்பு
கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் விவரங்களை ரகசியமாக திருடும் செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கூகுள் பிளே ஸ்டோரில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை ரகசியமாக திருடும் அம்சங்கள் நிறைந்த ட்ரோஜன் ரக செயலிகளை அவாஸ்ட் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரோஜன் செயலிகளில் அதிகளவு மறைக்கப்பட்ட விளம்பரங்கள் இருப்பதாகவும், இது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த பயனர்களை குறிவைத்தே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்று அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த செயலிகள் கேம் போர்வையில் அதிகளவு விளம்பரங்களை ஒளிபரப்பி பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை மிக ரகசியமாக திருடி வருவதாக அவாஸ்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ட்ரோஜன் செயலிகள் தங்களின் ஐகான்களை மறைத்துக் கொள்ளும் தன்மை கொண்டை ஆகும். மேலும், இவை ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்களை குறிப்பிட்ட கால அட்டவணையில் தொடர்ந்து ஒளிபரப்பும் தன்மை கொண்டிருக்கும் என அவாஸ்ட் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவாஸ்ட் ஆராய்ச்சியாளர்கள் மறைக்கப்பட்ட விளம்பரங்கள் நிறைந்த 30 ட்ரோஜன் ரக செயலிகளை கண்டறிந்து தெரிவித்து இருந்தனர். இவற்றில் 30 செயலிகளை கூகுள் அதிரடியாக நீக்கி இருக்கிறது.
Next Story






