என் மலர்

  தொழில்நுட்பம்

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட் அம்சம்
  X

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட் அம்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படுகிறது. #WhatsApp  வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெகேஷன் மோட் அம்சம் சோதனை செய்யப்படுவது பற்றிய விவரங்கள் வெளியானது. இதில் உரையாடல்களை ஆர்ச்சிவ் செய்யும் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன. 

  வாட்ஸ்அப் செயலியில் வெகேஷன் மோட் இதுவரை வழங்கப்படாத நிலையில், இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) எனும் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. இத்துடன் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.101 பதிப்பில் பிரத்யேக ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. 

  வாட்ஸ்அப் பீட்டா ஆப் டவுன்லோடு செய்யும் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படுகிறது. புதிய பீட்டா செயலியில் மற்றபடி பெரிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.   இனி பயனர்கள் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை ஹோம் பேஜில் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்தே இயக்க முடியும். இதனால் பயனர்கள் சாட் ஃபீட்களில் ஸ்கிரால் செய்ய வேண்டிய அவசியமின்றி ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்திடலாம். 

  முன்னதாக பார்க்கப்பட்ட வெகேஷன் மோடிற்கு மாற்றாகவே புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் (Ignore archived chats) அம்சம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் புதிய மெசேஞ்கள் வரும்போது குறுந்தகவல்கள் தானாக அன்-ஆர்ச்சிவ் ஆவதை தடுக்கும்.

  புதிய இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- நோட்டிஃபிகேஷன்ஸ் -- இக்னோர் ஆர்ச்சிவ்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். எனினும், இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்படுகிறது. இந்த அம்சத்தை உடனடியாக பயன்படுத்த புதிய பீட்டா செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  Next Story
  ×