search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    100 கோடி பயனர்களை கடந்த டிக்டாக் செயலி
    X

    100 கோடி பயனர்களை கடந்த டிக்டாக் செயலி

    உலகம் முழுக்க இளைஞர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் டிக்டாக் செயலியை 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். #TikTok #Apps



    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் சமூக வலைதள செயலியான டிக்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் 100 கோடி பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். பைட்டான்ஸ் எனும் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக அமைந்துள்ளது.

    வீடியோ சார்ந்த செயலிகளில் இந்த செயலி ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பின்தள்ளியிருக்கிறது. 100 கோடி 
    டவுன்லோட்களில் டிக்டாக் பல்வேறு மொழி வேரியண்ட்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 100 கோடி டவுன்லோட்களில் சீன சந்தையை சேர்ந்த ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை அடங்காது.



    அந்த வகையில் இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம். 100 கோடி டவுன்லோடுகளை சென்சார் டவர் ஸ்டோர் இன்டெலிஜன்ஸ் எனும் ஆப் அனாலடிக்ஸ் தளம் முதலில் அறிவித்தது. 

    இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் 2018 வரை மொத்தம் 66.3 கோடி பேர் டவுன்லோடு செய்திருந்தனர். இதே ஆண்டில் ஃபேஸ்புக் செயலியை சுமார் 71.1 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் செயலியை சுமார் 44.4 கோடி பேர் டவுன்லோடு செய்தனர்.

    2018 ஆம் ஆண்டு டிக்டாக் செயலி அதிகளவு பிரபலமாகி அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகளில் நான்காவது இடம் பிடித்தது. ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் அதிக இன்ஸ்டால்களை பெற்ற செயலிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இத்துடன் அமெரிக்காவில் கேமிங் இல்லாத செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்திருக்கிறது.
    Next Story
    ×