search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒருவழியாக சரிசெய்யப்பட்ட வாட்ஸ்அப் பிழை
    X

    ஒருவழியாக சரிசெய்யப்பட்ட வாட்ஸ்அப் பிழை

    வாட்ஸ்அப் செயலியில் ஆகஸ்டு மாதம் கண்டறியப்பட்ட பிழை ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் இருந்து வந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பயனர் வீடியோ கால் ஏற்கும் போது ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்துவிட முடியும். இந்த பிழையை தொழில்நுட்ப வலைதளங்களான ZDnet மற்றும் தி ரெஜிஸ்டர் உள்ளிட்டவை வெளிப்படுத்தின. 

    வாட்ஸ்அப் ஆப்பிள் மற்றும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருந்து வந்த பிழை ஆகஸ்டு மாதத்தில் கண்டறியப்பட்டு, அக்டோபர் மாத துவக்கத்தில் சரி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்த விவரங்களை வழங்க ஃபேஸ்புக் மறுத்துவிட்டது. பிழை சரி செய்யப்படும் முன், இவை ஏதேனும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    அழைப்பின் போது ஹேக் செய்வோர் தரப்பில் இருந்து ++ என கிளிக் செய்தாலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டு விடும் என இந்த பிழையை கண்டறிந்த டிராவிஸ் ஆர்மான்டி தெரிவித்தார். இவர் கூகுளின் பிராஜக்ட் ஜீரோவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு சாரந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. கடந்த வாரம் ஃபேஸ்புக் வரலாற்றில் மிகப்பெரும் பாதுகாப்பு பிழை அரங்கேறியது. இதில் சுமார் ஐந்து கோடி பயனர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டது.
    Next Story
    ×