என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மோட்டோரோலா மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதம் இந்தியாவில் வெளியாகும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் மோட்டோ ஜி5 பார்க்க மோட்டோ ஜி5 பிளஸ் போன்றே காட்சியளிக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர், 2 ஜிபி ரேம், 3ஜிபி ரேம் பதிப்பு மற்றும் 16 ஜிபி அல்லது 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
முன்னதாக மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் கொண்ட மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.
புகைப்படங்களை எடுக்க அதிநவீன 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை சக்தியூட்ட 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் 4ஜி, வோல்ட்இ, 3ஜி, வை-பை மற்றும் ப்ளூடூத் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் லைவ் எனும் நேரலை வீடியோ ஸ்டிரீம் செய்யும் வசதி கணினிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெப்கேமரா கொண்டு கணினிகளில் இருந்தே பேஸ்புக் லைவ் வீடியோ ஸ்டிரீம் செய்யலாம்.
சான்பிரான்சிஸ்கோ:
பேஸ்புக் லைவ் வசதி முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஸ்புக் பேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பேஸ்புக் லைவ் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் கணினிகளில் இருந்து நேரலை வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும்.
பேஸ்புக்கின் இந்த வசதி மூலம் வெப்கேமரா கொண்டு யார் வேண்டுமானாலும் பேஸ்புக் லைவ் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த நடவடிக்கையானது பேஸ்புக் லைவ் வீடியோ மற்றும் வீடியோ சேவைகளுக்கு பேஸ்புக் வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. டெஸ்க்டாப் மூலம் லைவ் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய லைவ் வீடியோ என்ற பெயரில் புதிய பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் லைவ் வீடியோ பட்டன் நியூஸ் ஃபீட், டைம்லைன் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வணிகம் மற்றும் கேமிங் நிறுவனங்கள் தங்களது பார்வையாளர்களை கவர முடியும் என பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு தரப்பினருக்கும் பேஸ்புக் லைவ் வீடியோ வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அறிமுக விழா மார்ச் 29 இல் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் மைக்ரோமேக்ஸ் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை வெளியிடும் என கூறப்படுகின்றது.
புதுடெல்லி:
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மார்ச் 29- இல் நடைபெற இருக்கும் விழாவிற்கான அழைப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. அதன் படி இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை மைக்ரோமேக்ஸ் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் டூயல் கேமரா லென்ஸ் கொண்ட ஸ்மார்ட்போனினை மைக்ரோமேக்ஸ் தயாரித்து வருவதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து மைகர்ரோமேக்ஸ் E4815 (F620) மாடல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செகன்டரி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது. மேலும் ஆக்டா கோர் மீடியாடெக் MT6750T 64 -பிட் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.

இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா, செல்ஃபி பிளாஷ் வழங்கப்படுவதோடு முன்பக்க கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மைக்ரோமேக்ஸ் பாரத் ஒன் மற்றும் பாரத் டூ என்ற பெயரில் மலிவு விலை பீச்சர் மற்றும் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்தது. இரண்டு மொபைல் போன்களிலும் 4ஜி வோல்ட்இ வசதி வழங்கப்படலாம் என்றும் இவை முறையே ரூ.1,999 மற்றும் ரூ.2,999 விலையில் விற்பனை செய்யப்படலாம் என கூறப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் ஒரே மேடையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், இதற்கான விழா ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
புதிய வகை வன்பொருள்களை அறிமுகம் செய்யும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் விழா ஒன்றிற்கு ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஆப்பிள் நிகழ்வுகளுக்கு 10 முதல் 12 நாட்களுக்கு முன் விழாவிற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்படும். இதுவரை ஆப்பிள் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் ஏப்ரல் மாதத்தில் ஆப்பிள் விழா நடைபெறலாம் என கூறப்படுகிறது.
புதிய ஆப்பிள் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஏப்ரல் மாதம் ஆப்பிள் விழா நடைபெறும் என்றும் இவ்விழாவில் ஆப்பிள் சாதனங்கள் மற்றும் மென்பொருள் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு ஆப்பிள் வெளியிடலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
10.5 இன்ச் ஐபேட் ப்ரோ:

புதிய வடிவமைப்பு கொண்ட ஐபேட் ப்ரோ தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் 9.7 இன்ச், 12.9 இன்ச் திரை கொண்ட ஐபேட் ப்ரோ மாடல்களுக்கு மாற்றாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் மாடலில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட 9.7 இன்ச் ஐபேட்:

தற்போது இருக்கும் 9.7 இன்ச் ஐபேட் சாதனமானது அதிவேக பிராசஸர், மேம்படுத்தப்பட்ட புதிய ஏ10 பிராசஸர் கொண்ட ஐபேட் சாதனம் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
ஐஓஎஸ் 10.3:
கடந்த சில வாரங்களாக ஐஓஎஸ் பீட்டா பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஐஓஎஸ் 10.3 பதிப்பு விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு புதிய வசதிகளும், ஆப் ஸ்டோரில் சில மாற்றங்களும் மேற்கொள்ளப்படலாம் என கூறப்படுகின்றது.
சிவப்பு நிற ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் புதிய நிறம் கொண்ட சாதனம் வெளியாகலாம் என முன்னதாக வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சாதனமும் ஆப்பிள் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
128 ஜிபி ஐபோன் SE:
மார்ச் 2016-இல் வெளியிடப்பட்ட ஐபோன் SE 16 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 128 ஜிபி மெமரி கொண்ட ஐபோன் SE இந்த ஆண்டு வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. 4.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் SE ஆப்பிளின் A9 பிராசஸர் கொண்டு இயங்குகின்றது.
4K ஆப்பிள் டிவி:
4K தரவுகளை சப்போர்ட் செய்யும் டிவியினை ஆப்பிள் வெளியிடும் என்றும் இந்த டிவிக்கான சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் ஆப்பிள் 4K டிவிக்கள் விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு மூலம் தற்போது இருப்பதை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன்:
இன்ப்ராரெட் சிக்னல்களின் உதவியோடு தற்போது இருப்பதை விட 100 மடங்கு வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் புதிய முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். புதிய வழிமுறையை கொண்டு அதிகளவு சாதனங்களுக்கு ஒரே சமயத்தில் இண்டர்நெட் வழங்க முடியும்.
நெதர்லாந்தை சேர்ந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் நொடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்தில் இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதோடு அனைத்து சாதனங்களுக்கும் இண்டர்நெட் கிடைக்கும் என்பதால் இண்டர்நெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிய முறையில் மிக குறைந்த விலையில் கட்டமைக்கக்கூடிய இந்த அமைப்பின் மூலம் லைட் ஆன்டெனாக்கள் மூலம் இண்டர்நெட் வழங்கப்படுகிறது. லைட் ஆன்டெனாக்கள் வெவ்வேறு திசைகளில் வெளிச்சத்தை பரப்பும். ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் வெளிச்சத்தை பரப்பி அதன் மூலம் இண்டர்நெட் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ப்ராரெட் பயன்படுத்துவதால் இது உடல் ரீதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வை-பைக்களில் 2.5 அல்லது 5.0 ஜிகாஹெர்ட்ஸ் ரேடியோ சிக்னல்களை பயன்படுத்துகின்றன. புதிய அமைப்பு இன்ப்ராரெட் அமைப்புகள் 1500 நானோமீட்டர் மற்றும் அதற்கும் அதிகமான அளவுகளை பயன்படுத்துகின்றன.
ஆய்வின் போது சுமார் 2.5 மீட்டர் தொலைவில் நொடிக்கு 42.8 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் வழிமுறைகளில் அதிசிறந்த நிலைகளிலும் நொடிக்கு 300 எம்பி என்ற வேகத்தில் மட்டுமே இண்டர்நெட் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக ரேடியோ சிக்னல்களை கொண்டு டவுன்லோடு செய்வதற்கான சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ சென்சார் மற்றும் வைப்ரேட்டர்களின் உதவியுடன் நடனம் கற்று கொடுக்கும் படி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க்:
சாலிட் பிக்சல்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஷூ பிரிவில் வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் முன்னரே ரிதம் ஷூ உலகளவில் பிரபலமாகியுள்ளது.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சாதனங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
தற்சமயம் துவக்க பணிகளில் இருக்கும் இந்த ஸ்மார்ட் ஷூவை வணிக ரீதியில் வெளியிடுவதற்கான பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. நியூ யார்க் நகரை சேர்ந்த நிறுவனம் 40,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 26,19,124 ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஷூக்கள் செயலியுடன் இணைந்து நடன பயிற்சிகளுக்கான அசைவுகளை உணர்த்துவதோடு, நடனம் ஆடும் போது எவ்வாறு உடலை அசைக்க வேண்டும் என்பதை வீடியோ வடிவில் காண்பிக்கிறது.
ஏராளமான சென்சார்கள் உதவியோடு ரிதம் செயலியுடன் இணைந்து கொள்ளும் ஸ்மார்ட் ஷூ நடன அசைவுகளை ஷூக்களுக்கு வைப்ரேஷன் மூலம் அனுப்பி கால் அசைவுகளோடு, உடலை எவ்வாறு அசைக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த ஷூக்கள் சென்சார்களுடன் இணைந்து கொள்ள வழி செய்கிறது.
ஒவ்வொரு நாளும் உங்களது நடனம் எவ்வாறு மேம்பட்டுள்ளது, உங்களது புதிய அசைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் கொண்ட ரிதம் ஸ்மார்ட் ஷூ விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரிதம் ஸ்மார்ட் ஷூ எவ்வாறு இயங்குகிறது, என்பதை விளக்கும் வீடியோவை இங்கு காணலாம்..,
அருகாமையில் இருக்கும் ஹாட்ஸ்பாட் கொண்டு இண்டர்நெட் பயன்படுத்துவதை போன்று அருகாமையில் கிடைக்கும் ஆன்டெனா கொண்டு சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதியை சோனி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
வாஷிங்டன்:
வை-பை ஹாட்ஸ்பாட் கொண்டு இண்டர்நெட் பயன்படுத்துவதை போன்று, இரு சாதனங்களிடையே சார்ஜ் செய்யும் வழிமுறைக்கான காப்புரிமையை கோரி சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. அமெரிக்க காப்புரிமை மற்றும் முத்திரை வழங்கும் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பதை சோனி நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்துள்ளது.
சோனியின் புதிய காப்புரிமையின் படி நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அருகாமையில் இருக்கும் சாதனங்களில் இருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நியர் ஃபீல்டு கம்யூனிகேஷன்ஸ் கொண்டு தரவு கட்டமைப்பு மற்றும் மின் பரிமாற்றம் என்ற பெயரில் இந்த காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

சோனி நிறுவனத்தின் புதிய காப்புரிமையானது இன்று வை-பை ஹாட்ஸ்பாட் கொண்டு இண்டர்நெட் பயன்படுத்துவதை போன்று அருகாமையில் இருக்கும் ஆன்டெனா கொண்டு வயர்லெஸ் முறையில் சாதனத்தை சார்ஜ் செய்து கொள்ளும். தற்சமயம் காப்புரிமை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தொழில்நுட்பம் வணிக ரீதியாக பயன்படுத்துவது குறித்து குறித்து எவ்வித தகவலும் இல்லை.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டில் துவங்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது.
சியோல்:
சாம்சங் நிறுவனம் சில ஆண்டுகளாக மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் ஐஎஃப்ஏ 2017 விழாவில் சாம்சங் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் டீசர் அறிமுகம் அல்லது ஸ்மார்ட்போனின் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் மட்டுமின்றி பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களது எதிர்கால சாதனங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்த தகவல்களை ஐஎஃப்ஏ விழாவில் அறிவிக்க இருக்கின்றன.

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் மடிக்கும் வசதி கொண்ட சாதனத்தை தயாரிப்பதற்கான காப்புரிமையை பெற கொரியாவில் பதிவு செய்திருந்தது. பாதியாக மடிக்கும் வசதி கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் கேலக்ஸி X என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனில் வழக்கமான சாம்சங் ஹோம் பட்டன், மெனு பட்டன் மற்றும் பேக் பட்டன் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்கள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
ஸ்மார்ட்போனுடன் இணைந்து பல்வேறு சேவைகளை இயக்க வழி செய்யும் ஸ்மார்ட் ஜாக்கெட் விலை ரூ.23,152 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனை விலைக்கு இந்த ஜாக்கெட் வழங்கும் சேவைகள் எவை என்பதை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் நமக்கு பல்வேறு பயன்களை வழங்குகின்றன. புதிய கண்டுபிடிப்புகள் நம்மை மனதளவில் கவர்ந்து வரும் நிலையில் நம் உடலோடு இணைந்து நமக்கு புதிய அனுபவத்தை வழங்க இருக்கின்றன. சில ஆண்டுகளாக கூகுள் ஆய்வறைகளில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் ஜாக்கெட் முழுமையான செயல் வடிவம் பெற்றுள்ளன.
நம் உடலில் அணிந்து கொண்ட பின் சில அசைவுகளில் பல்வேறு பலன்களை இந்த ஜாக்கெட் வழங்குகிறது. பல்வேறு சென்சார் மற்றும் நுண்கருவிகள் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் ஜாக்கெட், நமது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு வேலை செய்கிறது.

ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்தல், இசையை இயக்குதல் என பல்வேறு ஸ்மார்ட்போன் சேவைகளையும் ஸ்மார்ட் ஜாக்கெட்டில் சில அசைவுகளில் இயக்க முடியும். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஜாக்கெட் கான்செப்ட் இன்று முழு வடிவம் பெற்று 350 டாலர்கள் அதாவது ரூ.23,152 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் மற்றும் லெவிஸ் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஜாக்கெட் ஜாக்வார்டு என அழைக்கப்படுகிறது. இதனுடன் வழங்கப்படும் சிறிய யுஎஸ்பி சாதனத்தை ஜாக்கெட்டில் வைத்தால் ஸ்மார்ட் அம்சம் செயல்படுத்தப்படும். பின் யுஎஸ்பியை எடுத்து பின் துவைக்கலாம்.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என தற்சமயம் கசிந்துள்ள புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
மோட்டோரோலா, ஆப்பிள் மற்றும் லீஇகோ போன்றே கூகுள் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்களில் இருந்து ஹெட்போன் ஜாக்களை நீக்கலாம் என புதிய தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் ஆவணத்தின் மூலம் புதிய கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்த ஆவணத்தின் இதர தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்படவில்லை.
ரகசியமாக கசிந்த கூகுள் ஆவணத்தில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது உறுதியானது என்றும் இதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளதாக இது குறித்து வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரை வெளியாகியிருக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வமற்றது என்பதால் பிக்சல் 2 ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னதாக வெளியான தகவல்களில் கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்களில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக கேமரா, பிராசஸர் உள்ளிட்டவை முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை வித சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் பிரான்டு ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக கூகுள் சார்பில் சொந்தமாக தயாரிக்கப்படும் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இவை பிரீமியம் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் பிரீமியம் மாடல்களுக்கு போட்டியாக அமைந்தது.
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் கூகுளின் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சான்பிரான்சிஸ்கோ:
கூகுள் இறுதியாக வெளியிட்ட இயங்குதளம் இன்னும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை வெளியிட தயாராகி விட்டது. அதன் படி மே மாதம் கூகுள் டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் ஆண்ட்ராய்டு 8.0 அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதில் புதிய ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு, குரோம் இயங்குதளம் மற்றும் கூகுள் பிளே உள்ளிட்ட சேவைகளுக்கு துணை தலைவராக இருக்கும் ஹிரோஷி லாக்ஹெய்மர் சமீபத்திய ட்வீட் மூலம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பு ஓரியோ என அழைக்கப்படலாம் என குறிப்பிட்டிருந்தார். டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் மூன்று ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி காப்பி லெஸ் என்ற அம்சம் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஏற்கனவே மேற்கொண்ட சாட்களை கொண்டு குறிப்பிட்ட வார்த்தைகளை தானாக உணர்ந்து பரிந்துரைக்கும். இதனால் சாட் செய்யும் போதோ அல்லது மின்னஞ்சல் அனுப்பும் போதோ அதிகம் பயன்படுத்த வேண்டிய சில வார்த்தைகளை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
மற்றொரு அம்சம் ஏற்கனவே ஆப்பிள் ஐ.ஓ.எஸ்.களில் வழங்கப்பட்டதை போன்றதாகும். இதில் ஏதேனும் முகவரியை டைப் செய்யும் போது அந்த முகவரியை அழுத்தினால் மேப்ஸ் ஓபன் ஆகும். அதில் முகவரியை செட் செய்து கொள்ள முடியும். இது வரை ஆண்ட்ராய்டில் வழங்கப்படாத இந்த அம்சம் புதிய பதிப்பின் மூலம் வழங்கப்படலாம்.
இறுதியாக ஜெஸ்ச்சர் வசதியும் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்படலாம். ஹூவாய், எல்ஜி போன்றே சில வார்த்தைகளை வரைந்து குறிப்பிட்ட செயலிகளை இயக்க முடியும். இதே போன்ற வசதி லினியேஜ், சினோஜென், ஆக்சிஜன் என பல்வேறு இயங்குதளத்திலும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிரெஸ்ஸோ வடிவமைத்த நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 1,52,709 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
புதுடெல்லி:
நோக்கியா 3310 சுப்ரிமோ புதின் பதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1,13,500க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிரெஸ்ஸோ ஆடம்பர போன் பிராண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள நோக்கியா 3310 பீச்சர் போன் 2,290 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,52,709 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிரெஸ்ஸோ 3310 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆடம்பர பீச்சர் போன் கிரேடு 5 டைட்டானியம் ஷெல் மற்றும் கீபேட் கொண்டுள்ளது. இத்துடன் 3 எம்பி பிரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 32 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் தாங்கும் படி உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ள கிரெஸ்ஸோ நோக்கியா 3310 பீச்சர் போனில் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. கருப்பு மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த பீச்சர் போன்கள் குறைந்தளவு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு கொண்ட நோக்கியா 3310 சில வாரங்களுக்கு முன் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒற்றை சிம் மற்றும் இரண்டு சிம் ஸ்லாட் கொண்டுள்ள இரு மாடல்கள் வெளியிடப்பட்டன. இரு மாடல்களிலும் 2.1 இஞ்ச் QVGA டிஸ்ப்ளே, 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2ஜி கனெக்டிவிட்டி, புதிய யூஸர் இன்டர்பேஸ், எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 16 எம்பி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 1200 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த போன் நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.






