என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது
    X

    பேஸ்புக் லைவ் டெஸ்க்டாப்பிலும் வழங்கப்பட்டது

    பேஸ்புக் லைவ் எனும் நேரலை வீடியோ ஸ்டிரீம் செய்யும் வசதி கணினிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வெப்கேமரா கொண்டு கணினிகளில் இருந்தே பேஸ்புக் லைவ் வீடியோ ஸ்டிரீம் செய்யலாம்.
    சான்பிரான்சிஸ்கோ:

    பேஸ்புக் லைவ் வசதி முதற்கட்டமாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஸ்புக் பேஜ்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் பேஸ்புக் லைவ் அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. இதனால் பேஸ்புக் பயன்படுத்துவோர் கணினிகளில் இருந்து நேரலை வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும்.  

    பேஸ்புக்கின் இந்த வசதி மூலம் வெப்கேமரா கொண்டு யார் வேண்டுமானாலும் பேஸ்புக் லைவ் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். இந்த நடவடிக்கையானது பேஸ்புக் லைவ் வீடியோ மற்றும் வீடியோ சேவைகளுக்கு பேஸ்புக் வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. டெஸ்க்டாப் மூலம் லைவ் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய லைவ் வீடியோ என்ற பெயரில் புதிய பட்டன் வழங்கப்பட்டுள்ளது. 



    பேஸ்புக் லைவ் வீடியோ பட்டன் நியூஸ் ஃபீட், டைம்லைன் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் வணிகம் மற்றும் கேமிங் நிறுவனங்கள் தங்களது பார்வையாளர்களை கவர முடியும் என பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு தரப்பினருக்கும் பேஸ்புக் லைவ் வீடியோ வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×