என் மலர்
செய்திகள்

வீடியோ: இந்த ஸ்மார்ட் ஷூ இருந்தால் நீங்களும் பிரபு தேவா போல் ஆடலாம்
அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள புதிய வகை ஸ்மார்ட் ஷூ சென்சார் மற்றும் வைப்ரேட்டர்களின் உதவியுடன் நடனம் கற்று கொடுக்கும் படி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நியூ யார்க்:
சாலிட் பிக்சல்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ரிதம் ஷூ, காலில் அணிந்து கொள்பவருக்கு நடனம் பயிற்றுவிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஷூ பிரிவில் வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் முன்னரே ரிதம் ஷூ உலகளவில் பிரபலமாகியுள்ளது.
இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சாதனங்களில் ஒன்றாக உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஷூவில் பல்வேறு சென்சார் மற்றும் வைப்ரேட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை எந்த காலை எந்த சமயத்தில் அசைக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
தற்சமயம் துவக்க பணிகளில் இருக்கும் இந்த ஸ்மார்ட் ஷூவை வணிக ரீதியில் வெளியிடுவதற்கான பணிகளுக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது. நியூ யார்க் நகரை சேர்ந்த நிறுவனம் 40,000 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 26,19,124 ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஷூக்கள் செயலியுடன் இணைந்து நடன பயிற்சிகளுக்கான அசைவுகளை உணர்த்துவதோடு, நடனம் ஆடும் போது எவ்வாறு உடலை அசைக்க வேண்டும் என்பதை வீடியோ வடிவில் காண்பிக்கிறது.
ஏராளமான சென்சார்கள் உதவியோடு ரிதம் செயலியுடன் இணைந்து கொள்ளும் ஸ்மார்ட் ஷூ நடன அசைவுகளை ஷூக்களுக்கு வைப்ரேஷன் மூலம் அனுப்பி கால் அசைவுகளோடு, உடலை எவ்வாறு அசைக்க வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறது. ப்ளூடூத் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட இந்த ஷூக்கள் சென்சார்களுடன் இணைந்து கொள்ள வழி செய்கிறது.
ஒவ்வொரு நாளும் உங்களது நடனம் எவ்வாறு மேம்பட்டுள்ளது, உங்களது புதிய அசைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு புதிய வசதிகள் கொண்ட ரிதம் ஸ்மார்ட் ஷூ விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரிதம் ஸ்மார்ட் ஷூ எவ்வாறு இயங்குகிறது, என்பதை விளக்கும் வீடியோவை இங்கு காணலாம்..,
Next Story






