என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்களை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் புதிய குழு ஒன்றை உருவாக்கி அதில் பணியாற்றவுள்ள பொறியாளர்களை பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டம் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கென பயோமெடிக்கல் துறையை சேர்ந்த பொறியாளர் குழு ஒன்றை ஆப்பிள் உருவாக்கியுள்ளது. இந்த குழுவினர் சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்களை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    எனினும், இது குறித்து பதில் அளிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. புதிய பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பாலோ ஆல்டோவில் உள்ள நான்டீஸ்க்ரிப்ட் அலுவலகத்தில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    உயிரியல், மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றை பயோ-எலெக்ட்ரானிக்ஸ் முறையில் நோய்களை குணப்படுத்த பல்வேறு நிறுவனங்களும் பணியாற்றி வரும் நிலையில் புதிய சந்தையில் ஆப்பிள் நிறுவனமும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 





    கடந்த ஆண்டு கிளாக்சோஸ்மித்கிளைன் மற்றும் ஆல்ஃபாபெட் இன்க் புதிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்தன. இந்த நிறுவனம் பயோ-எலெக்ட்ரிக் சாதனங்களை மனிதர்களின் நரம்புகளில் புகுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் பயோ-எலெக்டிரானிக்ஸ் நன்மைகளை விளக்கி, இவற்றின் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற நிறுவனங்களைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் பயோ எலெக்ட்ரிக் சாதனம் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவனத்தின் இண்டர்நெட் டிவி இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான ஏர்டெல் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய சாதனம் உங்களுக்கு வழங்கும் சேவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஏர்டெல் நிறுவனத்தின் புதிய இண்டர்நெட் டிவி சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சாதனம் கொண்டு உங்கள் ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் உதவியோடு பல்வேறு இண்டர்நெட் சேவைகளை பெற முடியும். புதிய சாதனத்தை வாங்குவோருக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக கிடைக்கும் ஏர்டெல் இண்டர்நெட் டிவியுடன் மூன்று மாதங்களுக்கு இலவச ஏர்டெல் டிடிஎச் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் இண்டர்நெட் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப அதிகபட்சம்  25 ஜிபி வரையிலான இலவச டேட்டா வழங்கப்படுகிறது. 

    இதே போல் குறுகிய கால சலுகையாக ரூ.7,999 செலுத்தினால் 1 வருடத்திற்கான அனைத்து எச்டி மற்றும் எஸ்டி சேனல்களை
    பாரக்க முடியும். இத்துடன் இரோஸ் சேவையை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கவும், நெட்ஃப்ளிக்ஸ் முதல் மாத சேவையை இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச கேம்களையும் வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. 



    எல்ஜி நிறுவனம் தயாரித்த ஏர்டெல் இண்டர்நெட் டிவியுடன் கூகுள் குரோம்காஸ்ட் சான்று பெற்றிருக்கிறது. ஏர்டெல் இண்டர்நெட் டிவியில் வை-பை, ப்ளூடூத் உள்ளிட்ட ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் இண்டர்நெட் டிவியின் இந்திய விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஏர்டெல் STB இந்தியாவின் முதல் 4K-வசதி கொண்டுள்ளது, இதனால் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். STB-யானது டூயல் கோர் ARM B15 பிராசஸர், 2 ஜிபி ரேம், 4K வீடியோ மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.



    மற்ற அம்சங்களை பொருத்த வரை டால்பி அட்மாஸ் வசதி, வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் எச்டிஎம்ஐ 2.0 போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை கொண்டு 500+க்கும் அதிகமான டிவி சேனல்கள், ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட நெட்ஃப்ளிக்ஸ் செயலி, கூகுள் பிளே ஸ்டோர் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 

    இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் கிடைக்கும் செயலிகள் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்யலாம், இத்துடன் STB-யுடன் ஏர்டெல் மூவிஸ் செயலியும், புகைப்படம், வீடியோ அல்லது கேம்களை ஸ்மார்ட்போன் மூலம் பெரிய திரையில் காஸ்ட் செய்து பார்க்க முடியும். மேலும் STBயில் மைக்ரோ எஸ்டி கார்டுகளை பொருத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi 6 ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    பீஜிங்:

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi 6 ஸ்மார்ட்போன் வெளியீடு ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Mi 6 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 19-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என சமீபத்தில் சியோமி வெளியிட்டுள்ள டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    பீஜிங் நகரின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள அறிமுக விழாவில் புதிய சியோமி சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும், இதன் விலை மற்றும் விநியோகம் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. 

    சீன மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள Mi6 டீசரை மொழி மாற்றம் செய்த போது, "நீங்கள் 203 நாட்கள் காத்திருந்தீர்கள், நாங்கள் ஏழு ஆண்டுகளாக காத்திருந்தோம்", என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுதவிர டீசரில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. 



    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், இவற்றின் விலை முறையே CNY 2,199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,500 மற்றும் CNY 2,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் தவிர Mi6 பிளஸ் ஸ்மாரட்போனும் வெளியிடப்படும் என்றும் இதில் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட மாடல்கள் முறையே CNY 2,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,000, CNY 3,099 அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,990, CNY 3,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,600 வரை நிர்ணய்ம செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

    மேலும் புதிய Mi 6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 8 எம்பி செல்ஃபி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யு்ம வசதி வழங்கப்படலாம். இத்துடன் Mi6 ஸ்மார்ட்போனில் குவாட் எச்டி 2K OLED டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, குவால்காம் நிறுவனத்தின் குவிக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பம் மற்றும் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    எச்எம்டி குளோபல் தயாரித்து விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விலை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    எல்சிங்கி:

    நோக்கியா பிரான்டிங் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து விரைவில் விற்பனை செய்ய இருக்கும் எச்எம்டி குளோபல் நோக்கியா 9 எனும் ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 699 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விற்பனை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. 



    சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 22 எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. நோக்கியாவின் 3D சவுண்டு வழங்கும் OZO ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் 350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    முன்னதாக நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன்களும் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 மொபைல் போனினை வெளியிட்டது. எனினும் இவற்றை விற்பனை தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
    இந்தியாவில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஆல்காடெல் நிறுவனமும் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா அமைப்பு ஃபிளாக்‌ஷிப் வகை ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த நிலையில் சில நிறுவனங்கள் இரட்டை கேமரா அமைப்பை செல்ஃபி எடுக்க ஏதுவாக வழங்கினர். அந்தவகையில் ஒப்போ, விவோ மற்றும் எல்ஜி நிறுவனங்களை போன்றே ஆல்காடெல் நிறுவனமும் இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை, ஹீலியோ டீக்கா-கோர் பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹீலியோ X20 டீக்கா-கோர் பிராசஸர், கைரேகை ஸ்கேனர் மற்றும் 3100 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கேமரா கலர் புகைப்படங்களையும், மற்றொரு கேமரா கருப்பு, வெள்ளை நிறத்திலும் புகைப்படத்தை எடுக்கும். இரு லென்ஸ்களிலும் f/2.0 வகை அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கேமரா அமைப்பு மூலம் புகைப்படங்களை மிக துல்லியமாக, அதன் உண்மையான நிறம் மாறாமல் படமாக்க முடியும். 



    செல்ஃபி எடுக்க 8.0 எம்பி மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராவிற்கும் ஒரே அளவு அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை செல்ஃபி கேமரா அமைப்பை கொண்டு புகைப்படங்களை எடுத்த பின்பும் அவற்றின் போகஸ்-ஐ மாற்ற முடியும். 

    ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனின் கனெக்டிவிட்டியை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.1, யுஎஸ்பி ஓடிஜி, டைப்-சி போர்ட், GPRS/EDGE, GPS, A-GPS/Glonass/Beidou, AGPS மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆல்காடெல் பிளாஷ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
    ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஐபோன் 8 என அழைக்கப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு எதிர்பார்க்கப்பட்டதை விட தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஆப்பிள் ஐபோன் 8 இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இதன் வெளியீடு தாமதமாகலாம் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு பத்தாவது ஆண்டு ஐபோனாக இருப்பதால் ஐபோன் 8 மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. 

    ஐபோன் 8 வடிவமப்பு முதல் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அதிகப்படியான மாற்றங்கள் இதன் வெளியீட்டை தாமதமாக்கி வருகிறது. புதிய ஐபோனில் வளைந்த OLED பேனல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பு பணிகள் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் நிறைவடையாது. இதன் காரணமாக ஐபோன் 8 அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 



    புதிய அறிவிப்பு ஐபோன் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும் மற்றொரு தகவல் அவர்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. ஐபோன் 8 வெளியீடு தாமதமானாலும் அதன் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,990.50க்குள் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 'ஐபோன் எடிஷன்' என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து 70 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களை வாங்க ஆப்பிள் முன்பதிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியானது. இத்துடன் புதிய ஐபோன் 8-இல் 3D செல்ஃபி கேமரா, எம்பெடெட் கைரேகை ஸ்கேனர் மற்றும் உயர்-ரக ஃபேஷியல் ரெகக்னீஷன் வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    விலையை பொருத்த வரை புதிய ஐபோன் 8, 850 டாலர்கள் முதல் 900 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,100 முதல் ரூ.58,400 துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி ஐபோன் 8 தயாரிப்பு கட்டணமானது அதிகபட்சம் 70 முதல் 80 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,500 முதல் ரூ.5,100 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
    இந்தியாவில் சோனி நிறுவனத்தின் XZs ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 11-ந்தேதி துவங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் சோனியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி எக்ஸ்பீரியா XZs என பெயரிடப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் இன்று துவங்கியுள்ளது, விற்பனை ஏப்ரல் 11-ந்தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.7 இன்ச் எக்ஸ்பீரியா XZs குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 குவாட்கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 2900 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

    புகைப்படங்களை எடுக்க 19 எம்பி மோஷன்-ஐ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அல்ட்ரா ஸ்லோ-மோஷன் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். இத்துடன் பல்வேறு கேமரா சென்சார்களும் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க ஏதுவாக 13 எம்பி கேமராவும், வைடு-ஆங்கிள் லென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 



    அனைத்து சோனி விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வரயிருக்கும் சோனி எக்ஸ்பீரியா XZs பிளிப்கார்ட் தளத்திலும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனினை வாங்க முன்பதிவு செய்வோருக்கு ரூ.4990 மதிப்புள்ள வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புத்தம் புதிய சோனி எக்ஸ்பீரியா XZs ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    உலகம் முழுவதும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மனிதர்களை போன்றே பல்வேறு செயல்களை மேற்கொள்ளும் பிரத்தியேக வகையில் ‘கேஸ்பர்’ என்னும் அதிநாவீன ரக ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை கடந்து மனிதர்களை போன்றே ரோபோட்களை உருவாக்க வழி செய்துள்ளது. உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொள்ள ஏராளமான ரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறைந்த அளவு திறன் கொண்ட, பொம்மை போன்று காட்சியளிக்கும் ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

    மனிதர்களின் மூளையில் ஏற்படும் ஒருவித கோளாறு மனிதர்களிடத்தில் ஆட்டிசம் குறைபாடாக அறியப்படுகிறது. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு மனிதர்களை போன்று அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகள், மற்றும் மனிதர்களுடன் பழகுவதே சிரமமான காரியமாக இருக்கும். 

    இந்நிலையில், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    கேஸ்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள ரோபோட் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்தவர்களுடன் எளிய நடையில் பேசும் திறன் கொண்ட கேஸ்பர், அடித்தால் அழுவது, பாதம் மற்றும் வயிற்றை தொட்டால் சிரிப்பது போன்றவற்றை மனிதர்களைப் போன்றே செய்கிறது. 

    கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 170-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கேஸ்பர் உதவிகரமாக இருந்துள்ளதாக இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டிசம் பாதித்தவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடுவது, தம்புரா இசைப்பது, உணவு உட்கொள்வது உள்ளிட்டவற்றையும் கேஸ்பர் மேற்கொள்கிறது. 

    பொழுதுபோக்கு ரோபோட்கள் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து. ஆட்டிசம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஓரளவுக்கு ஏதுவான திறன்களை கொண்டுள்ள இந்த கேஸ்பர் ரோபோட் அடுத்தகட்ட ஆராய்ச்சியின் பலனாக மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் ஒரு நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் சேவையை பெறும் முதல் நகரம் மற்றும் இத்தகைய வேகத்தில் இண்டர்நெட் வழங்கும் நிறுவனம் எது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
    ஹைதராபாத்:

    இந்தியா முழுத்த தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2.5 எம்பியாக (2.5 Mbps) உள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமான ஆக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நொடிக்கு 1 ஜிபி (1Gbps) வரை இண்டர்நெட் வேகம் வழங்குவதாக அறிவித்துள்ளது. 

    அதன்படி ஹைதராபாத் நகரில் பிராட்பேண்ட் சேவைகளின் மூலம் நொடிக்கு 1 ஜிபி என்ற வேகத்தில் இண்டர்நெட் வழங்குவதாக அறிவித்துள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஹைதராபாத்தில் இதற்கான பணிகள் ஒரு ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 



    இந்நிலையில், ஹைதராபாத் நகரில் 1 ஜிபி திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ.5,999 என்ற விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராமா ராவ் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். 

    தெலங்கானாவில் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ள 1 ஜிபி திட்டம், அதிகளவு இண்டர்நெட் பயன்பாட்டு வழிமுறைகளை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்றும், தெலங்கானாவின் 23 மில்லியன் மக்களுக்கும் இண்டர்நெட் வழங்கும் இம்மாநில அரசாங்கத்தின் இலக்கை அடைய பயனுள்ளதாக இருக்கும் என ஆக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாலா மல்லாடி தெரிவித்துள்ளார்.
    எல்ஜி நிறுவனம் இரட்டை கேமரா கொண்ட தனது முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஜி6 என அழைக்கப்படலாம் என்றும் இதில் இரட்டை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனின் முன்பக்க பேனலின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் இரட்டை செல்ஃபி கேமரா இடம் பெறும் என தெரியவந்துள்ளது. இதுவரை டூயல் பிரைமரி கேமரா வழங்கப்பட்டு வந்த நிலையில் இரட்டை செல்ஃபி கேமரா கொண்ட முதல் எல்ஜி ஸ்மார்ட்போன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.



    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. எல்ஜி வி20 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

    முன்னதாக எல்ஜி நிறுவனத்தின் ஜி6 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரியாவில் முதல் நாள் விற்பனையில் 20,000 எல்ஜி ஜி6 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எஸ்ஜி ஜி6 குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3300 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.   
    சியோமி நிறுவனத்தின் Mi6 ஸ்மார்ட்போனில் குவால்காம் 835 சிப்செட் வழங்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் குவால்காம் 821 சிப்செட் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் சியோமி, ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனையும் தயாரித்து வருகிறது. சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 6 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிப்செட் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியானது. 

    அந்த வகையில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் கொண்டு இயங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் குவால்காம் 821 சிப்செட் வழங்கப்படலாம் என தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கின்றன. வெய்போ சமூகவலைத்தள பக்கத்தில் சியோமி குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்த அறிவிப்பு பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்ததை தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியானது.   

    ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. Mi6 ஸ்மார்ட்போன் மூன்று மாடல்களில் வெளியாகும் என்பதால் ஒரு மாடலில் மீடியாடெக் ஹீலியோ X30 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 



    சிறப்பம்சங்களை பொருத்த வரை Mi6 ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி TFT LCD டிஸ்ப்ளே, 4ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, உயர் ரக மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சியோமி Mi6 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX386 சென்சார், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX268 சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும் சமீபத்தில் வெளியான தகவல்களில் Mi6 ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா அமைப்பு மற்றும் டூயல் எல்இடி பிளாஷ் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. 

    Mi6 ஸ்மார்ட்போனில் சியோமி 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியை வழங்கும் என்றும், யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
    சோனி நிறுவனம் உலகின் அதிவேக எஸ்டி கார்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் சார்ந்த முழு தகவல்களை இங்கு பார்ப்போம்.
    புதுடெல்லி:  

    சோனி இந்தியா நிறுவனம் உலகின் அதிவேக எஸ்டி கார்டினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. SF-G சீரிஸ்-இன் புதிய எஸ்டி கார்டு வியாபார ரீதியிலான புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டுகளுடன் எஸ்டி மெமரி கார்டு ரீடரையும் வெளியிட்டுள்ளது. இதை கொண்டு கணினிகளில் அதிவேகமாக தரவுகளை டிரான்ஸ்ஃபெர் செய்ய முடியும். 

    சோனியின் புதுவரவு எஸ்டி கார்டு SF-G32/T1 IN 32 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ.6,700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SF-G64/T1 IN கார்டு 64 ஜிபி ரூ.11,000 என்றும், SF-G128/T1 IN  128 ஜிபி ரூ.19,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் புதிய எஸ்டி கார்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டி அறிவிக்கப்பட்டுள்ளது.   

    இத்துடன் சோனி MRW-S1/T1 IN கார்டு ரீடர் இந்திய மதிப்பில் ரூ.2,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கும் இந்த கார்டு ரீடரை வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    நொடிக்கு 299 எம்பி என்ற ரைட் ஸ்பீடு மற்றும் 300 எம்பி என்ற ரீட் ஸ்பீடு கொண்டுள்ளதால் சோனி SF-G சீரிஸ் கொண்டு தரவுகளை அதிவேகமாக பரிமாற்றி கொள்ள முடியும். இத்துடன் அதிக தரமுள்ள புகைப்படம், வீடியோக்களையும் நொடிகளில் பரிமாற்றம் செய்ய முடியும். 

    இந்த கார்டுகளை கொண்டு 4K, 2K, ஃபுல் எச்டி, XAVCS Codec தரத்தில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். சோனியின் அல்காரிதம் மூலம் தரவுகளின் தரம் குறையாமல் பரிமாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்டுகளை வாங்கும் போது அழிந்து போன புகைப்படம் மற்றும் வீடியோக்களை மீட்க வழி செய்யும் மென்பொருளும் இலவசமாக வழங்கப்படுகிறது.
    ×