என் மலர்

  செய்திகள்

  இரட்டை கேமரா கொண்ட நோக்கியா 9: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  X

  இரட்டை கேமரா கொண்ட நோக்கியா 9: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எச்எம்டி குளோபல் தயாரித்து விரைவில் வெளியிட இருக்கும் நோக்கியா 9 ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விலை சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
  எல்சிங்கி:

  நோக்கியா பிரான்டிங் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து விரைவில் விற்பனை செய்ய இருக்கும் எச்எம்டி குளோபல் நோக்கியா 9 எனும் ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் 699 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.44,999 விலையில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், புதிய நோக்கியா 9 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விற்பனை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.   சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 22 எம்பி இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

  மெமரியை பொருத்த வரை 64 ஜிபி மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், IP68 சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. நோக்கியாவின் 3D சவுண்டு வழங்கும் OZO ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் 350 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. 

  முன்னதாக நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 7 ஸ்மார்ட்போன்களும் மேம்படுத்தப்பட்ட நோக்கியா 3310 மொபைல் போனினை வெளியிட்டது. எனினும் இவற்றை விற்பனை தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
  Next Story
  ×