என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடியோ: ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் ரோபோட் - ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் அபாரம்
    X

    வீடியோ: ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் ரோபோட் - ப்ரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் அபாரம்

    உலகம் முழுவதும் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மனிதர்களை போன்றே பல்வேறு செயல்களை மேற்கொள்ளும் பிரத்தியேக வகையில் ‘கேஸ்பர்’ என்னும் அதிநாவீன ரக ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    தொழில்நுட்ப வளர்ச்சி எல்லைகளை கடந்து மனிதர்களை போன்றே ரோபோட்களை உருவாக்க வழி செய்துள்ளது. உலகெங்கும் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொள்ள ஏராளமான ரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறைந்த அளவு திறன் கொண்ட, பொம்மை போன்று காட்சியளிக்கும் ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

    மனிதர்களின் மூளையில் ஏற்படும் ஒருவித கோளாறு மனிதர்களிடத்தில் ஆட்டிசம் குறைபாடாக அறியப்படுகிறது. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு மனிதர்களை போன்று அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகள், மற்றும் மனிதர்களுடன் பழகுவதே சிரமமான காரியமாக இருக்கும். 

    இந்நிலையில், ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் ரோபோட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



    கேஸ்பர் என பெயர் சூட்டப்பட்டுள்ள ரோபோட் ஆட்டிசம் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்தவர்களுடன் எளிய நடையில் பேசும் திறன் கொண்ட கேஸ்பர், அடித்தால் அழுவது, பாதம் மற்றும் வயிற்றை தொட்டால் சிரிப்பது போன்றவற்றை மனிதர்களைப் போன்றே செய்கிறது. 

    கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 170-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கேஸ்பர் உதவிகரமாக இருந்துள்ளதாக இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டிசம் பாதித்தவர்களுடன் சேர்ந்து பாட்டு பாடுவது, தம்புரா இசைப்பது, உணவு உட்கொள்வது உள்ளிட்டவற்றையும் கேஸ்பர் மேற்கொள்கிறது. 

    பொழுதுபோக்கு ரோபோட்கள் என்ற எல்லைகளை எல்லாம் கடந்து. ஆட்டிசம் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஓரளவுக்கு ஏதுவான திறன்களை கொண்டுள்ள இந்த கேஸ்பர் ரோபோட் அடுத்தகட்ட ஆராய்ச்சியின் பலனாக மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×