search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் புது கேலக்ஸி லேப்டாப் அறிமுகம் செய்யும் சாம்சங்?
    X

    ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் புது கேலக்ஸி லேப்டாப் அறிமுகம் செய்யும் சாம்சங்?

    • சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதனங்கள் மட்டுமின்றி லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் அடுத்த தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    கடந்த சில ஆண்டுகளாகவே சாம்சங் நிறுவனம் லேப்டாப் பிரிவிலும் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. 2023 வாக்கில் சாம்சங் புதிய தலைமுறை கேலக்ஸி லேப்டாப்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய கேலக்ஸி லேப்டாப்களில் மேம்பட்ட ஹார்டுவேர், சிறப்பான சாஃப்ட்வேர் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை லேப்டாப்களை கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி அன்பேக்டு 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வு பிப்ரவரி 2023 மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிகிறது. பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களை அறிமுகம் செய்வதால் இந்த நிகழ்வு வழக்கத்தை விட நீண்ட நேரம் நடைபெறலாம்.

    புதிய ஹை-எண்ட் லேப்டாப் மாடல்களில் மேம்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்படலாம். புதிய கேலக்ஸி புக் லேப்டாப்களில் இண்டெல் நிறுவனத்தின் 13th Gen பிராசஸர்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் S பென் ஸ்டைலஸ், பிரத்யேக GPU உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

    கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் வயர்லெஸ் இயர்பட் உள்ளிட்டவைகளுடன் பயன்படுத்தும் போது கூடுதல் அம்சங்களை மென்பொருள் பிரிவில் வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய லேப்டாப்களில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×