search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாசனாம்பா கோவில்"

    • ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபம் ஏற்றப்பட்டது.
    • 13 நாட்களில் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மட்டும் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு கோவில் நடை அடைக்கும்போது ஏற்றப்படும் விளக்கு அணையாமல் இருக்கும் என்றும், பூக்கள் மற்றும் பிரசாதம் கெட்டு போகாமல் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    இந்த ஆண்டும் கடந்த 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் 27-ந்தேதி (நேற்று) வரை 15 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கோவிலை சுத்தம் செய்யப்பட்டதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மறுநாள் 14-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். மந்திரிகள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களும் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். முதல் நாள் (13-ந்தேதி) மற்றும் சூரிய கிரகணத்தையொட்டி 25-ந்தேி ஆகிய 2 நாட்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடைசி நாளான நேற்று காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் மதியம் 12 மணி அளவில் ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கோவில் நடை அடைக்கப்பட்டது. முன்னதாக ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், பூக்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.

    ஹாசனாம்பாவுக்கு பிரசாதமும் படைக்கப்பட்டது.

    ஹாசனாம்பா கோவிலில் ரூ.1,000, ரூ.300-க்கான சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வினியோகம் செய்யப்பட்டது. டிக்கெட் கட்டணம், பிரசாதம் மூலம் ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார். மேலும் 13 நாட்களிலும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    • சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டது.
    • நாளை பாரம்பரிய முறைப்படி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    ஹாசனில் பிரச்சித்தி ஹாசனாம்பா தேவி கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளியையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் கடந்த ஆண்டு நடைசாத்தப்படும்போது ஏற்றி வைத்த தீபம் அணையாமல் இருக்கும். மேலும் சாமிக்கு படைத்த பிரசாதம் கெட்டுபோகாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றையதினம் கோவில் சுத்தம் செய்யும் பணி நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மறுநாள் 14-ந் தேதி முதல் பத்கர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 12 நாட்களாக பக்தர்கள் தினமும் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    பலர் நேர்த்தி கடன் செலுத்திவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது அர்ச்சகர்களால் வழக்கம்போல ஹாசனாம்பா தேவிக்கு பூஜை செய்துவிட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஹாசனாம்பா தேவி கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் சில பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து 27-ந்தேதி (நாளை) தீபம் ஏற்றி வைப்பதுடன், சாமிக்கு பிரசாதம் படையலாக வைத்து சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய முறைப்படி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    • இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும்.
    • வருகிற 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.

    தற்போது கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் 8-வது நாளான நேற்று ஹாசனாம்பா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஹாசன் தாலுகா பொம்மனஹள்ளியை சேர்ந்த கிரீஷ் (வயது 24) என்பவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவில் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவ முகாமுக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது கிரீஷ், மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இது ஹாசனாம்பா கோவிலுக்கு வந்த பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • வருகிற 27-ந்தேதி வரை 15 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.
    • நடைதிறக்கும் நாட்களை நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்

    ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் நடை ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியை முன்னிட்டு 10 நாட்களுக்கு மேல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்படும். கோவில் திறக்கும்போது கடந்தாண்டு நடை சாத்தப்பட்டபோது ஏற்றி வைக்கப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுப்போகமலும், பூக்கள் வாடாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி வரை 15 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.

    முதல் நாள் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு, 2-வது நாளில் இருந்து கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நாள்தோறும் வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் 7-வது நாளான நேற்றும் ஹாசனாம்பா தேவியை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிலர் சிறப்பு கட்டணத்தில் தரிசனம் செய்தனர். மேலும் சில அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் சாமி தரிசனம் செய்தனர்.

    மாற்றுத்திறனாளி பெண்ணை, அவரது கணவர் தூக்கி சென்று ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்ய வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கவுரம்மா, மாற்றுத்திறனாளி ஆவார். கவுரம்மாவால், சாதாரண மனிதரை போல் நடக்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுரம்மா, ஹாசனாம்பா தேவியை தரிசனம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக நாகராஜ், மனைவி கவுரம்மாவை ஹாசனாம்பா தேவி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் நாகராஜூக்கு, கவுரம்மாவை வைத்து கொண்டு தரிசனம் செய்ய சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மனைவியை தூக்கி சென்று சாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லும்படி கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகராஜ், மனைவி கவுரம்மாவை கருவறை முன்பு வரை தூக்கி சென்று சாமி தரிசனம் செய்ய வைத்துள்ளார். இதற்கு போலீசாரும் சக பக்தர்களை விலககோரி வழிவகுத்து கொடுத்துள்ளனர்.

    இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு கட்டண தரிசனம் மூலம் முதல் 3 நாட்களில் ரூ.42.78 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அந்த 3 நாட்களில் ரூ.30½ லட்சம் மதிப்புள்ள லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடைதிறக்கும் நாட்களை நீட்டிப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    • 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்த கோவிலில் கடைசி நாளன்று பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு, பிரசாதம் படைக்கப்படும்.

    இதையடுத்து ஓராண்டு கழித்து நடை திறக்கும்போது கோவிலில் ஏற்றப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுக்போகாமல் இருக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படுவதால் ஹாசனாம்பா கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி வருகிற 13-ந்தேதி(நேற்று) முதல் 27-ந்தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. நல்லநேரத்தில் மதியம் 12.14 மணிக்கு ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது.

    மந்திரி கோபாலய்யா, பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., கலெக்டர் அர்ச்சனா, ஹாசனாம்பா கோவில் நிர்வாக அதிகாரி ஜெகதீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். முதல்நாளன்று கோவில் நடைதிறந்ததும் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதையொட்டு கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • முதல் நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    • நாளை முதல் 27-ந்தேதி வரை கோவில் நடை திறக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மேலும் கோவிலின் விசேஷம் என்னவென்றால் கடைசி நாளன்று கோவிலில் பூஜை செய்து தீபம் ஏற்றப்பட்டு, பிரசாதம் படைக்கப்படும். இதையடுத்து ஓராண்டு கழித்து நடை திறக்கும்போது ஹாசனாம்பா தேவி அருளால் ஏற்றப்பட்ட தீபம் அணையாமலும், படைக்கப்பட்ட பிரசாதம் கெட்டுக்போகாமல் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த நாட்களில் ஹாசனாம்பா கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளியையொட்டி வருகிற 13-ந்தேதி(நாளை) முதல் 27-ந்தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுகிறது. முதல்நாளான நாளை கோவில் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் முதல்நாளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஹாசன் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, மக்கள் பிரதிநிதிகள் மட்டும் கலந்து கொள்வார்கள். மேலும் 25-ந்தேதி சூரியகிரகணம், 27-ந்தேதி நடை சாத்தப்படும் நாள் ஆகிய 2 நாட்களுக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதற்கு இடைப்பட்ட நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹாசனாம்பா கோவில் நடை திறப்பதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. அந்த வகையில் ஹாசன் மாவட்ட நிர்வாக கருவூலத்தில் இருந்த சாமி நகைகள் அனைத்தும் புஷ்ப பல்லக்கு மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இது தாசில்தார் நடேஷ் முன்னிலையில் நடந்தது.

    ×