search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஹாசனாம்பா தேவி கோவிலில் இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி
    X

    ஹாசனாம்பா தேவி கோவிலில் இன்று மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

    • சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டது.
    • நாளை பாரம்பரிய முறைப்படி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    ஹாசனில் பிரச்சித்தி ஹாசனாம்பா தேவி கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளியையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் கடந்த ஆண்டு நடைசாத்தப்படும்போது ஏற்றி வைத்த தீபம் அணையாமல் இருக்கும். மேலும் சாமிக்கு படைத்த பிரசாதம் கெட்டுபோகாமல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றையதினம் கோவில் சுத்தம் செய்யும் பணி நடந்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து மறுநாள் 14-ந் தேதி முதல் பத்கர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 12 நாட்களாக பக்தர்கள் தினமும் வந்து சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

    பலர் நேர்த்தி கடன் செலுத்திவிட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது அர்ச்சகர்களால் வழக்கம்போல ஹாசனாம்பா தேவிக்கு பூஜை செய்துவிட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஹாசனாம்பா தேவி கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் சில பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். இந்த நிலையில் இன்று(புதன்கிழமை) பக்தர்கள் தரிசனம் செய்ய மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து 27-ந்தேதி (நாளை) தீபம் ஏற்றி வைப்பதுடன், சாமிக்கு பிரசாதம் படையலாக வைத்து சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய முறைப்படி கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    Next Story
    ×