search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    8-வது நாளாக ஹாசனாம்பா கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தரிசனம்
    X

    8-வது நாளாக ஹாசனாம்பா கோவிலில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தரிசனம்

    • இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும்.
    • வருகிற 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் தீபாவளி பண்டிகையையொட்டி நடை திறக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது. வருகிற 27-ந்தேதி வரை நடை திறந்திருக்கும்.

    தற்போது கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் 8-வது நாளான நேற்று ஹாசனாம்பா கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ஏராளமான பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவித்தனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஹாசன் தாலுகா பொம்மனஹள்ளியை சேர்ந்த கிரீஷ் (வயது 24) என்பவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவில் வளாகத்தில் இருந்த தற்காலிக மருத்துவ முகாமுக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது கிரீஷ், மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இது ஹாசனாம்பா கோவிலுக்கு வந்த பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×