search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவண்டு"

    • திருச்சி எட்டரை பூ காட்டில் விஷ வண்டு கடித்து 25 பேர் காயமடைந்துள்ளனர்
    • காயம்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதி

     ராம்ஜிநகர்,

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை என்பவர் தனது சொந்த ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் மல்லிகைப்பூ பயிரிட்டுள்ளார் அதனை தினமும் காலை 7 மணிக்கு சுமார் 10 - க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூ பறித்துள்ளனர். அதனைப் போல அருகில் இருந்த வயலில் அதே பகுதியைச் சேர்ந்த அங்காண்டி என்பவரும் தனது வயலில் மல்லிகை பூ பெயரிட்டுள்ளார் அவரும் பத்திரிக்கை மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூப்பறித்துள்ளார். அப்போது சுமார் 8 மணி அளவில் கூட்டமாக வந்த விஷ வண்டுகள் பூ பறித்துக் கொண்டிருந்த அஞ்சுகம், சின்ன பொண்ணு, வளர்மதி, மலர், மூர்த்தி, ராஜா, முருகாயி, செல்வி உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கடித்தது. வலி தாங்காமல் கதறிய பெண்கள் மற்றும் ஆண்களை அருகில் இருந்தவர்கள் தங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மூலம் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் கிராம மக்கள் வயலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

    • மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது.
    • சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (42).

    இவர் புதன் சந்தையில் கால்நடை மருந்து கடை வைத்துள்ளார். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது.

    இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர்.

    இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×