search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ மாத்திரை சாப்பிட்டு"

    • மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
    • அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் கைவெட்டி மல்ல நாயக்கனூரைச் சேர்ந்தவர் ரவி (55). விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் பிரபாகரன் (33).

    கடந்த 2 வருடங்களுக்கு முன் ரவி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் ரவி தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை என மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கைவெட்டியூர் செல்லும் வழியில் உள்ள காலி இடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ரவி கிடப்பதாக அவரது மகன் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அங்கு சென்று பார்த்த போது அவரது அருகில் சில விஷமாத்திரைகள் கிடந்துள்ளன.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனி ன்றி பரிதாபமாக உயிரிழ ந்தார்.

    இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை குன்னத்தூர்ரோடு பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணன் (35). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவிலலை.

    இவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்தவர்களிடம் நான் கடையில் வைத்திருந்த விஷ மாத்திரை சாப்பிட்டு விட்டதாக கூறி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் எனபது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×