என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிப்பாடு"

    • கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அவினாசி:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அவினாசியிலுள்ள கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் அவினாசி காரணப் பெருமாள் கோவில்,கருவலூர் கருணாகர வெங்கட ரமண பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

    • சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
    • அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது

    உடுமலை

    உடுமலை திருமூர்த்திநகர் கிராமத்தில் அழகு திருமலை ராய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமை உடுமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தளி தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மேலாளர் ரகோத்துமன் தலைமை தாங்கினார்.

    இதில் வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×