search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசம் அயர்லாந்து தொடர்"

    • அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 107 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்தது.
    • ஆட்டநாயகன் விருதை முஷ்பிகுர் ரஹீம் தட்டிச் சென்றார்.

    மிர்புர்:

    வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அயர்லாந்து 214 ரன்களும், வங்காளதேசம் 369 ரன்களும் எடுத்தன. 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்களுடன் ஊசலாடியது.

    3-வது நாளான நேற்று அயர்லாந்தின் பேட்டிங் வியப்பூட்டியது. அறிமுக வீரரும், விக்கெட் கீப்பருமான லோர்கன் டக்கெர் சதம் அடித்து அசத்தினார். டெஸ்டில் சதம் விளாசிய 2-வது அயர்லாந்து வீரர் என்ற பெருமையை பெற்ற டக்கெர் 108 ரன்களில் (162 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார்.

    அவருக்கு ஹாரி டெக்டர் (56 ரன்), ஆன்டி மெக்பிரின் (71 ரன், நாட்-அவுட்) நன்கு ஒத்துழைப்பு தந்ததால் அயர்லாந்து சரிவில் இருந்து வலுவாக மீண்டெழுந்தது. நேற்றைய முடிவில் அயர்லாந்து 2-வது இன்னிங்சில் 107 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 286 ரன்கள் சேர்த்து மொத்தம் 131 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 4 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்தது அயர்லாந்து. இதனால் இன்றைய நாளில் 6 ரன்கள் மட்டுமே கூடுதலாக எடுத்தது. 116 ஓவரில் 292 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்னிலையாக 137 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான தமிம் இக்பால் 31 லிண்டன் தாஸ் 23 ரன்னிலும் அடுத்து வந்த சண்டோ 4 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    அடுத்து வந்த மொமினுல் ஹக் - முஷ்பிகுர் ரஹீம் ஜோடி நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

    27.1 ஓவரில் 3 விக்கெட்டுகைளை இழந்து 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.

    ×