search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரே‌சன் கடை"

    திருவாரூர் ரேசன் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். #ministerkamaraj

    திருவாரூர்:

    தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை நாட்களிலும் நியாயவிலைக் கடைகள் முழுநேரமும் செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருவாரூர் நகராட்சி குட்பட்ட கீழவீதி நியாயவிலைக் கடையில் அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொருட்களின் தரம், அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பண்டிகை நாட்களில் பொதுவிநோகத்திட்ட பொருட்களை எந்தவித சிரமம்மின்றி பொதுமக்கள் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விடுமுறை தினத்திலும் தீபாவளிக்கு முதல்நாள் வரை நியாயவிலைக்கடைகள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்ற உத்தரவினை முதலமைச்சர் பிறப்பித்துள்ளார்.

    அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையிலும் நியாயவிலைக்கடைகள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தையும், விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினையும் அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே பொதுவிநியோக திட்டத்தை பொறுத்தவரை எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் பண்டிகை நாட்களில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது தாசில்தார் குணசீலி, வட்ட வழங்கல் அலுவலர் குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #ministerkamaraj

    ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. #Rationshop
    சென்னை:

    தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ரே‌ஷன் கடைகள் வழக்கம் போல திறந்து இருந்தன.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக்கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து ரே‌ஷன் கடைகளும் செயல்பட்டன. மக்களுக்கு ரே‌ஷன் பொருட்கள் தடையின்றி கிடைத்தன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து ரே‌ஷன் கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன. சென்னையில் 1200 ரே‌ஷன் கடைகள் உள்ளன. டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, நாம்கோ, காஞ்சீபுரம் மொத்த கூட்டுறவு பண்டக சாலை நடத்தும் கடைகள் உள்ளிட்ட எல்லா நியாய விலைக் கடைகளும் திறந்து இருந்தன. சென்னையில் உள்ள ரே‌ஷன் கடை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அத்தியாவசிய பொருட்கள் பாதிப்பு இல்லாமல் வினியோகிக்கப்பட்டன.

    இதுகுறித்து டி.யூ.சி.எஸ் அண்ணா தொழிற்சங்க கூட்டுறவு பிரிவு செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:-


    சென்னையில் நியாய விலைக்கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. டி.யூ.சி.எஸ். சார்பில் நடத்தப்படும் 303 ரே‌ஷன் கடைகள் மட்டுமின்றி சிந்தாமணி கடைகள் 198, நாம்கோ கடைகள் 92, காஞ்சீபுரம் சொசைட்டி கடைகள் 417 என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன என்றார்.

    இதற்கிடையில் வேலை நிறுத்தம் குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌ஷன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று முதல் தொடங்கி உள்ளோம்.

    ஆனால் இதுநாள் வரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

    இதற்கிடையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    இந்த போராட்டம் திடீர் என அறிவிக்கவில்லை. இதுசம்பந்தமாக பலமுறை தெரிவித்தும் யாரும் பேச்சு வார்த்தைக்கு அழைக்காததால் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

    ஆகையால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள ரே‌ஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்காமல் உள்ளனர்.

    ஆனால் கடைகளுக்கு பொருட்கள் வந்தஉடன் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து இருப்பு குறைவாக உள்ளது என குற்றம்சாட்டி ரே‌ஷன் பணியாளர்களை அடிமைகளாக மாற்றி அவர்களுக்கு வீண் செலவை ஏற்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சஸ்பெண்டும் செய்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rationshop
    ×