search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திரநாத் எம்.பி"

    • கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது.
    • ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

    சென்னை:

    சென்னையில் இயங்கி வரும் கல்லால் குழுமம் வரி ஏய்ப்பு மற்றும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இது தொடர்பாக கல்லால் குழுமம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.

    இந்நிலையில் கல்லால் குழுமத்தின் முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கல்லால் குழுமம் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அறக்கட்டளையில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து ரூ..8.5 கோடி பெற்றதை அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அந்த தொகையை உடனடியாக வங்கி கணக்கில் இருந்து அவர் எடுத்துக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ரவீந்திரநாத் எம்.பி.க்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    மேலும் லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், தயாரிப்பாளருமான ஜி.கே.எம்.குமரனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ரூ.15 கோடி மதிப்புள்ள இல்லத்தையும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் ரூ.36 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    • சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று ரவீந்திரநாத் தெரிவித்தார்.
    • விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள சொர்க்கம் வனப்பகுதியில் தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி 2½ வயது மதிக்கத்தக்க சிறுத்தை வேலியில் சிக்கி உயிரிழந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மாவட்ட வனத்துறை மற்றும் கலெக்டருக்கு புகார் மனு அளித்து போராட்டங்களும் நடத்தினர். இதனைதொடர்ந்து அந்த தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த அலெக்ஸ்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையவே தோட்டத்தின் மேலாளர்களான தங்கவேல், ராஜவேல் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் எம்பியாக இருப்பதால் விசாரணைக்கு அழைக்க மக்களவை சபாநாயகருக்கு தேனி மாவட்ட வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விசாரணை நடத்த மக்களவை சபாநாயகர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ரவீந்திரநாத் எம்.பியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தேனி மாவட்ட வனஅலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

    ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகாமல் கடிதம் மூலம் பதில் அளித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி ரவீந்திரநாத் எம்.பி. தேனி மாவட்ட வனசரக அலுவலர் சமர்தாவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் உண்மை நிலவரம் குறித்து தெரிவித்ததாகவும், இதில் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். விசாரணைக்கு ரவீந்திரநாத் எம்.பி. ஆஜராக வந்தபோது அங்கு ஏராளமான அ.தி.மு.கவினர் மற்றும் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×