search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி"

    • வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார்.
    • பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் பாண்டி(43). கூலித்தொ ழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக பெரியகுளம் முருகமலை புளியோடை பகுதியில் டேம் கட்டுவதற்காக காண்டிராக்ட் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    சம்பவத்தன்று அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயர்அழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து பாண்டி தூக்கிவீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே பாண்டி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கொடமாண்டப்பட்டி பகுதியில் முருகன் என்பவரது தோப்பில் மாதம்பதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்றுகாலை தேங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பி எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த மணிகண்டன் உறவினர்கள் விரைந்து வந்து உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர்.

    தொடர்ந்து இதே போல் பல இடங்களில் உயர்மின்அழுத்த கம்பி தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்து போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையை விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் இன்றுகாலை அந்த பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரங்கநாதன் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை தடாகத்தை அடுத்த பன்னிமடை தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52). இவர் கணுவாய் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று ரங்கநாதன் வழக்கம்போல வேலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த ஏணி ஒன்றை எடுத்து மாற்றி வைத்தார். அதில் அந்த ஏணி அங்கிருந்த மின் வயர் மீது பட்டது.இதில் மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த ரங்கநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×