தடாகம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ரங்கநாதன் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடாகம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

கோவை,

கோவை தடாகத்தை அடுத்த பன்னிமடை தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52). இவர் கணுவாய் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று ரங்கநாதன் வழக்கம்போல வேலைக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த ஏணி ஒன்றை எடுத்து மாற்றி வைத்தார். அதில் அந்த ஏணி அங்கிருந்த மின் வயர் மீது பட்டது.இதில் மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த ரங்கநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com