search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிதலி ராஜ்"

    ஐசிசி பெண்கள் சாம்பியன்ஷிப்பில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது. #NZWvINDW
    ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு அணிகளும் மற்ற நாடுகளில் சென்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். அதன்படி தற்போது இந்திய பெண்கள் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதலி ராஜ் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 161 ரன்னில் சுருண்டது.

    கோஸ்வாமி 3 விக்கெட்டும், ஏக்தா பிஸ்ட், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெர்மையா ரோட்ரிக்ஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ரோட்ரிக்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 8 ரன்னில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனாவுடன் கேப்டன் மிதலி ராஜ் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றி பெற வைத்தனர். இந்திய 35.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. ஸ்மிரிதி மந்தனா 90 ரன்னுடனும், மிதலி ராஜ் 63 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 
    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக 105 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் மிதலி ராஜ். #MithaliRaj
    இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது போட்டி நடைபெற்றது. இதில் முதலில் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    தொடக்க வீராங்கனையும், இந்திய பெண்கள் அணியின் அனுபவம் வாயந்தவரும் ஆன மிதலி ராஜ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 31 பந்தில் அரைசதம் அடித்த, மிதலி ராஜ், 59 பந்தில் சதம் அடித்தார். அவர் 61 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம் டி20 போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஸ்மிரிதி 102 ரன்கள் அடித்தது சாதனையாக இருந்தது. அதை தற்போது மிதலி ராஜ் முறியடித்துள்ளார்.
    ×