search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்சல் நேசமணி"

    • மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
    • காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் மார்த்தாண் டம் வடக்கு தெருவில் உள்ள எம்.பி. அலுவல கத்தில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். நகர, வட்டார தலைவர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தி னர்களாக விஜய்வசந்த் எம்.பி. மற்றும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட எல்லா பஞ்சாயத்துகளிலும் 15 நாட்களில் வார்டு தலைவர்கள் நியமனம் செய்ய வேண்டும், வருகிற 19-ந் தேதி ராகுல்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்டம் சார்பாக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் மற்றும் ரத்த சேவை மையம் தொடங்குவது. மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் இனிப்பு வழங்கி கொண்டாடுவது.

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி மற்றும் செலின் மேரி ஆகியோர் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது,

    குமரி தந்தை மார்சல் நேசமணி பிறந்த நட்டாலம் கிராமத்தில் அவருக்கு சிலை வைப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ் ஏற்பாட்டில் விஜய்வசந்த் எம்.பி மற்றும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சி களில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், மாநில பொதுச்செயலாளர்கள் ஆஸ்கர் பிரடி, ரமேஷ் குமார், அகில இந்திய காரிய கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மேற்கு மாவட்ட சிறுபான்மை தலைவர் செல்வகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அம்பிளி, செலின்மேரி, ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், வட்டார தலைவர்கள் ஜெபா, குமார், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், வேர்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர் ஜெபசிங்குமார், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    கன்னியாகுமரி:

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் நினைவு தினம் இன்று அனு சரிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலெக்டர் ஸ்ரீதர், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநகராட்சி துணை மேயர் மேரிபிரின்சி லதா, நேச மணியின் பேரன் ரஞ்சித் அப்பல்லோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி தந்தை மார்சல் நேசமணியின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்றவர் மார்சல் நேசமணி. அவருடன் பயணித்த பல்வேறு தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியான தியாகங்கள், தியாக செம்மல்களை வணங்குகிறேன்.

    தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டந்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆவின் என்பது பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்த நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியை பெருக்குவதுடன் பொதுமக்களுக்கு தரமான பால் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஆவின் விலை ரூ.30 குறைத்ததுடன் உற்பத்தியாளர்களுக்கு ரூ.3 அதிகமாக வழங்கினார். தற்பொழுது ஆவினில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி பால் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆவின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு இருந்தார். அது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருத்து கூறுவது அவரவர் அடிப்படை உரிமை என்று கூறினார்.

    ×