search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயமான இளம்பெண்"

    • வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 21). கடந்த மாதம் 19-ந்தேதி அன்று வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்துள்ள ஸ்ரீநிதியின் தாய் வெங்கட்டம்மாள் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த இன்பசேகரன் என்ற இளைஞர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
    • ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்.ஜி.ஆர். நகர் சிவன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 24 ). இவர் தனது 4 வயது குழந்தை ஸ்ரீனிதுயுடன் கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.

    இது குறித்து அவரது கணவர் கம்சலா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அதேபோல கேளுகுண்டா கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் தாமோதரன் (15). இவரது உறவினர் ஒருவர் வெங்கடேஷ் நகரில் வசித்து வருகிறார். அவரது மகன்களான வினோத்குமார் (15), நடராஜ் (16) ஆகியோர் கடந்த ஒரு வாரமாக பெரியசாமி வீட்டில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் துக்க காரியம் ஒன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெரியசாமி 3 சிறுவர்களையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெரியசாமி தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கோவிந்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ள சிறுமியின் தாய் பிரதீபா தனது மகளை தாகேபல்லிதின்னா பகுதியை சேர்ந்த சிவகுமார் (19) என்ற வாலிபர் கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.
    • வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துவந்த வித்யா நேற்று முதல் திடீரென மயமாகி விட்டார்.

    தருமபுரி,

    தருமபுரி அருகேயுள்ள எர்ரனஹள்ளி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் பெருமாள்.இவரது மகள் வித்யா (வயது 20).இவர் நாகனம்பட்டியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்தபோது அங்கு வேலை செய்த ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருவண்ணாமலையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் தருமபுரி பஸ் நிலையத்தில் வித்யாவை விட்டுவிட்டு ராஜ்குமார் தனது ஊருக்கு சென்றுவிட்டார்.

    தாய் வீட்டுக்கு வந்த வித்யா தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை எடுத்துவந்த வித்யா நேற்று முதல் திடீரென மயமாகி விட்டார்.

    இது குறித்து அவரது தாய் மாரியாத்தா தந்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து மாயமான வித்யாவை தேடி வருகின்றனர்.

    • கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி செல்வி (வயது 26). இவர்களுக்கு சரண் (10), செஷாந்தி (8),அஜய் (4) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 21-ந்தேதி இதேபோல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாதையன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.

    அவர் திரும்பி வந்து பார்த்தபோது செல்வியையும், குழந்தைகளையும் காணவில்லை.பல்வேறு இடங்களில் விசாரித்து அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.

    இதையடுத்து உத்தரப்பள்ளியில் உள்ள செல்வியின் தாய் வீட்டுக்கு சென்று அங்கும் மாதையன் விசாரித்தார்.

    ஆனால் அங்கும் செல்வி செல்லவில்லை. இது குறித்து செல்வியின் தந்தை முனியாண்டி (55) உத்தரப்பள்ளி போலீசில் புகார் செய்தார் .அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியையும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    • மனைவியையும் கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • எனது மனைவி யையும் கண்டு பிடித்து தர போலீசார் முயற்சி எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் மணிவேல்(30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி(26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய மணிவேல் வீட்டில் தனது மனைவி இல்லாததது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. விசா ரணையில் அவரது உறவினர் செந்தில்குமார் என்பவருடன் கஸ்தூரி சென்றுவிட்டதாக அக்கம்ப க்கத்தினர் தெரிவித்தனர். செந்தில்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கஸ்தூரியை கடத்திச்சென்ற செந்தில்குமாரையும் தனது மனைவியையும் கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலை க்கழிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கி ன்றனர். இதுகுறித்து மணிவேல் தெரிவிக்கையில், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்து பின்னர் வடமதுரை போலீஸ் நிலை யத்திலும் புகார் அளிக்க நான், எனது மகன்கள் மற்றும் குடும்ப த்தினர் தினந்ேதாறும் போலீஸ் நிலையத்திற்கு வந்து செல்கி றோம். ஆனால் புகாரை வாங்ககூட போலீசார் மறு க்கின்றனர். எனது மனைவி யையும் கண்டு பிடித்து தர முயற்சி எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    ×