என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாயமான இளம்பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர்
  X

  குழந்தைகளுடன் போலீஸ் நிலையத்திற்கு மனு அளிக்க வந்த மணிவேல் குடும்பத்தினர்.

  மாயமான இளம்பெண்ணை கண்டுபிடித்து தரக்கோரி குடும்பத்தினர் கண்ணீர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மனைவியையும் கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • எனது மனைவி யையும் கண்டு பிடித்து தர போலீசார் முயற்சி எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் மணிவேல்(30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி(26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிய மணிவேல் வீட்டில் தனது மனைவி இல்லாததது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உறவினர்கள் வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. விசா ரணையில் அவரது உறவினர் செந்தில்குமார் என்பவருடன் கஸ்தூரி சென்றுவிட்டதாக அக்கம்ப க்கத்தினர் தெரிவித்தனர். செந்தில்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கஸ்தூரியை கடத்திச்சென்ற செந்தில்குமாரையும் தனது மனைவியையும் கண்டு பிடித்து தரக்கோரி அவரது கணவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  ஆனால் போலீசார் புகாரை வாங்காமல் அலை க்கழிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கி ன்றனர். இதுகுறித்து மணிவேல் தெரிவிக்கையில், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்து பின்னர் வடமதுரை போலீஸ் நிலை யத்திலும் புகார் அளிக்க நான், எனது மகன்கள் மற்றும் குடும்ப த்தினர் தினந்ேதாறும் போலீஸ் நிலையத்திற்கு வந்து செல்கி றோம். ஆனால் புகாரை வாங்ககூட போலீசார் மறு க்கின்றனர். எனது மனைவி யையும் கண்டு பிடித்து தர முயற்சி எடுக்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

  Next Story
  ×