search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மீது தாக்குதல்"

    • பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார்.

    அம்பத்தூர்:

    ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி நர்சிங் படித்து வருகிறார்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் அவரது தோழி ஒருவரை அழைத்த போது நம்பர் மாறுதலாகி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் கேண்டினில் வேலைபார்க்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (23) என்பவருக்கு சென்றது.

    இதனால் மாணவிக்கும் ஐயப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்தனர்.

    இந்தநிலையில் ஐயப்பன் திடீரென அந்த மாணவியை காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து இறங்கி வெங்கடாபுரம் அருகே மாணவி நடந்துசென்றார். அப்போது அங்கு வந்த ஐயப்பன் மீண்டும் மாணவியிடம் காதலை ஏற்குமாறு கூறி தகராறில் ஈடுபட்டார். இதனை மாணவி கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் பீர்பாட்டிலை உடைத்து மாணவியின் கழுத்தில் குத்தினார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றபொது மக்கள் ஐயப்பனை மடக்கி பிடித்து அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீர்பாட்டில் குத்தில் பலத்த காயம் அடைந்த மாணவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஏற்பட்ட கோபத்தில் பீர்பாட்டிலால் அவரை குத்தியதாக ஐயப்பன் தெரிவித்து உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை

    கோவை சுகுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத். இவரது மகள் அபிநயஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென அபிநயஸ்ரீ அருகில் வந்து பேசினார். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் அவரின் செல்போன் எண்ணை கேட்டார்.

    அதற்கு அவர் அந்த வாலிபரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கீழே தள்ளி விட்டு மிரட்டி சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.

    பின்னர் அவர்கள் அபிநயஸ்ரீ அழைத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அங்கு அபிநயஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×