search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி காயம்"

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினர். அப்போது ரெயில் ஏறியதில், 2 கால்கள் மற்றும் ஒரு கையை இழந்து மாணவி படுகாயமடைந்தார்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களை தேடி வருகின்றனர்.

    இதுதொடர்பான விசாரணையில், கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்த இளைஞர்கள், பின்தொடர்ந்து வந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    • அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள நெல்லிவாசல் ஊராட்சி, புலியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அன்று பள்ளியில் உணவு உண்ணும் போது அதே பகுதியை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி வாட்டர் பாட்டிலில் குடிப்பதற்காக தண்ணீர் வைத்துள்ளார்.

    அப்போது ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியிடம் எதற்காக வாட்டர் பாட்டிலில் தண்ணீர் வைத்துள்ளாய் எனக்கேட்டு மாணவி கன்னத்தில் பிரம்பால் அடித்துள்ளார்.

    பள்ளி முடிந்த பின்பு மாணவி மாலை வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அந்த மாணவியின் கன்னத்தில் காயம் இருப்பதை பார்த்த பெற்றோர் இது குறித்து விசாரித்தனர்.

    அப்போது மாணவி பள்ளியில் நடந்ததை கூறினார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியை, அவரது பெற்றோர் புதூர்நாடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

    இதேபோல் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களையும் அடிப்பதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.

    • பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.
    • குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள திண்டாலனூர் பொம்மிடி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது பந்தல் விழுந்த விபத்தில் 3 வகுப்பு படிக்கும் ரக்க்ஷா என்ற குழந்தையின் தலைமீது இரும்பு பைப் விழுந்தது.

    இதில் மண்டையில் ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சிந்திய நிலையில் குழந்தையை மீட்டு கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு தையல் போடப்பட்டது.

    பின்பு தருமபுரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார் . சுதந்திர தினவிழாவில் நடந்த இந்த சம்பவம் அதிர்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    ×