search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவன் சாதனை"

    • ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.
    • 19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.

    ஊத்தங்கரை,  

    ஊத்தங்கரை சரக அளவிலான பாரதியார் மற்றும் சுதந்திர தின விழா விளையாட்டு போட்டிகள் ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.

    இப்போட்டியில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ஆண்கள் 14 வயதிற்குட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் தேனமுதன் முதலிடமும், இரட்டையர் பிரிவில் கார்த்திகேயன் மற்றும் தீபக்சரன் முதலிடம் பெற்றனர். 17 வயதிற்கு உட்பட்ட இறகுபந்து ஒற்றையர் பிரிவில் பிரஜித் முதலிடமும் இரட்டையர் பிரிவில் பிரஜித் மற்றும் ராகுல் முதலிடமும் பெற்றனர்.

    பெண்கள் 17 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் தனுஷா பாரதி முதலிடமும் இரட்டையர் பிரிவில் தனுஷாபாரதி மற்றும் கனிமொழி முதலிடமும் பெற்றனர்.

    19 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் மோணிஷா முதலிடமும் இரட்டையர் பிரிவில் மோணிஷா மற்றும் ராகவி முதலிடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் பயிற்சி யளித்த உடற்கல்வி ஆசிரியர் களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபாதி திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி.கணபதி ராமன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணகுமார், துணை முதல்வர் அபிநயா கணபதி ராமன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    • மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பி.எஸ்.ஆர்.கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளது.
    • கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

    சிவகாசி

    தமிழக அரசின தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கடந்த ஏப்ரல் மாதம் விருதுநகர் மாவட்ட த்தில் நடைபெற்றது.

    மாவட்டம் வாரியாக நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்னை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் உயிர் மருத்துவப் பொறியியல் துறையின் மாணவன் நெல்லையப்ப ராஜா மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.

    வெற்றி பெற்ற மாண வனுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.12 ஆயிரம் காசோலை மற்றும் சான்றி தழை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அருள் வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவனுக்கு கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, உயிர் மருத்துவப்பொறியியல் துறைத்தலைவர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவனை பாராட்டினர்.

    • மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.
    • மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளான்.

    சூளகிரி,

    சூளகிரி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    22 - 23-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 10, 11, 12, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு சென்று சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.இவர்களில் மாணவன் செல்வன் மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தான்.

    மாணவர்களை நாகர்கோவில் அழைத்து சென்று பதக்கத்துடன் திரும்பிய உடற்கல்வி இயக்குனர் மகேஷ்வரன், பெருமாள் முதுகலை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ராமசந்திரன், சதிஷ்,கோவிந்தராஜ், ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர். 

    • 100 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார்.
    • ஆசிரியர்கள் பாராட்டினர்.

    செய்யாறு:

    தமிழகத்தில் பிளஸ் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் கே.கிஷோர் குமார் வரலாறு படத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்துள்ளார்.

    மேலும் அதே பள்ளியில் கிஷோர் குமார் 600க்கு551 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், எம். ஹேமநாத்534 மதிப்பெண் எடுத்து 2ம் இடத்தையும், வி. கார்த்திகேயன் 484 மதிப்பெண் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    தமிழக அளவில் ஒரே ஒரு மாணவனாக சாதனை படைத்த கிஷோர் குமார் உள்ளிட்ட 3 மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வழக்கறிஞர் அசோக், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

    ×