search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயான்"

    • வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    • ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ரோட்டரி சங்கம் சார்பில் சேவை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதனையடுத்து ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ஆர்.வெங்கடசுப்பு, செயலாளராக ஆர்.அருண்குமார், பொருளாளராக கே. ரத்தினசாமி என்கிற மணிவேல், துணைத்தலைவராக வீ.சி.சுவாமிநாதன், நிர்வாக செயலாளராக ராசி கே.ஆர் சின்னசாமி மற்றும் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

    பதவியேற்பின் போது தலைவர் ஆர்.வெங்கடசுப்பு கூறியதாவது:- கடந்த ஆண்டு ரோட்டரி சங்கத்தின் சார்பில் வெள்ளகோவில் பகுதியில் கண் சிகிச்சை முகாம், பொது நல மருத்துவ முகாம், செயற்கை கால் வழங்கும் முகாம் மற்றும் வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளர்சக்தி என்ற திட்டத்தின் கீழ் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று 40 கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான மின்மயானத்தை ரோட்டரி சார்பில் நவீனப்படுத்தி செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

    நிகழ்ச்சியில் பிற ஊர்களில் இருந்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பி .கோபாலகிருஷ்ணன், என் .மணிமாறன், எம்.பிரேம்குமார், டி.கே. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் செயல்பாடு குறித்து வாழ்த்தி பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் சங்க முன்னாள் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத் தலைவர் ஆடிட்டர் எஸ்.ரகுநாதன், செயலாளர் ஆர்.மோகன்குமார், பொருளாளர் ஏ.மகாதேவன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

    • பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறினார்.
    • நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    மெலட்டூர், அக்.13-

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சியில் பெருங்கரை கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி மயான பாதையை அரசு மூலம் புதுப்பிக்க தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து பெருங்கரை கிராமமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பாபநாசம் தாசில்தாரிடம் மயானபாதையை சர்வே செய்து தரும்படி மனு கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, ஒன்றிய உதவிபொறியாளர் கார்த்திகேயன், வடக்கு–மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச் செல்விகனகராஜ் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் பாபநாசம் குறு வட்ட நில அளவையர் செல்வக்குமார், அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராமநிர்வாக அதிகாரி லதா உள்பட வருவாய் துறையினர் மயான பாதைக்குரிய பகுதியை நில அளவை செய்து கல் நட்டனர்.

    நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    ×