search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு அதிகாரி கைது"

    • புகாரின்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • கைதான அபிலாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்.

    கோவை:

    கோவை ராம்நகரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அருகே உள்ள வீட்டில் வசிக்கும் அபிலாஷ் (வயது 41) என்பவர் இளம்பெண் குளிப்பதை மறைந்து இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    உடனடியாக அபிலாஷ் அங்கு இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து இளம்பெண் அவரது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அபிலாஷின் வீட்டிற்கு சென்று அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். அப்போது தெரியாமல் நடந்து விட்டது. மன்னித்து விடுங்கள் என கூறினார்.

    ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைதான அபிலாஷ் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மத்திய புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    • பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார்.
    • அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

    சாகர்:

    மத்தியபிரதேச மாநிலத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் மண்டல கமிஷனராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார்.

    இவருக்கு எதிராக பி.ஆர். நிறுவனத்தின் உரிமையாளரான அணிரூத் பிம்ப்லபுரே போலீசில் புகார் அளித்தார். அதில் தங்கள் நிறுவனம் மீதான நடவடிக்கையை தவிர்க்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

    புகாரை பெற்ற போலீசார் வருங்கால வைப்பு நிதி அதிகாரி சதீஷ்குமாரை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை அவர் வாங்கினார். அப்போது மறைந்து இருந்த போலீஸ்காரர்கள் அவரை வீட்டில் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.

    ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    ×