search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது எடுப்பு விழா"

    • பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வில்லுனி ஆற்றங்கரையில் பிடாரியம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடந்தது. பனங்குளம் கிராம பெண்கள் குடங்களில் நெல் நிரப்பி தென்னம்பாளைகளை வைத்து அலங்காரம் செய்து வீட்டு வாசலில் பூஜை செய்தனர். பின்னர் தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கைகளுடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று பிடாரியம்மன் கோவிலில் வைத்து வழிபட்டு சென்றனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
    • ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரில் அருள் பாலித்து வரும் நாடியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஆடி திருவிழாவை முன்னிட்டு நாடியம்மனுக்கு பூச்சொறிதல் கடந்த வாரம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதலும் மண்டக படிகளும் நடைபெற்றன. தொடரந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நெல் மணிகளை போட்டு அதில் தென்னம்பாளைகளை வைத்து அதனை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக நாடியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மூன்று முறை கோவிலை சுற்றி வந்து தென்ம்பாளைகள் மற்றும் நெல் மணிகளை கோவிலில் கொட்டி அம்மனை வழிபட்டு சென்றனர். அதில் கீழாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பூசாரி அம்மனுக்கு மகா தீபாராதனை செய்து மது குடங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.ஆலங்குடி மற்றும் வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
    • தென்னம்பாளைகளை சுமந்தவாறு பெண்கள் ஊர்வலம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஸ்ரீ நாடியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு மது எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலங்குடியில் உள்ள நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மதுஎடுப்பு திருவிழா நடைபெறும். அதன் படி இந்த ஆண்டிற்கான விழாவிற்கு ஆனி மாதம் கடைசி செவ்வாய்யன்று அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    அன்று முதல் நாள்தோறும் லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது அதனை தொடர்ந்து மண்டகப்படியும் சிற ப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆலங்குடி குற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், அலங்கரிக்கப்பட்ட குடங்களில் தென்னம்பாளைகளை சுமந்தவாறு வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    • குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்
    • மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    புதுக்கோட்டை :

    நல்ல மழைப்பொழிவு, விவசாயம் செழித்தல் மற்றும் ஊர் மக்களின் நலன் வேண்டி ஆடி மாதத்தில் மது எடுப்புத் திருவிழா நடைபெறுவது வழக்கம்

    ஆலங்குடி அருகே செல்லியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் குப்பக்குடி, பாத்தம்பட்டி, மேலக்கோட்டை கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குடங்களில் தென்னம்பாலையை வைத்து அலங்காரம் செய்து ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டனர்.

    மேலும் மது எடுப்புத் திருவிழா மாலை வேளைகளில் நடைபெறு வது வழக்கம். ஆனால் செல்லியம்மன் கோவில் மது எடுப்பு மட்டும் காலை பொழுதில் நடத்தப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×