search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சு விரட்டு போட்டி"

    • இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
    • உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் நேற்று மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி மற்றும் கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

    இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • வட மஞ்சு விரட்டு போட்டி நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாம்பூரில் தி.மு.க. சார்பில் வட மஞ்சு விரட்டுப் போட்டி நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 காளைகள் பங்கு கொண்டன. இதில் தனித்தனி குழுக்களாக 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கு கொண்டனர்.

    வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பிலும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும் தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான சண்முகவடிவேல், மாநில இலக்கிய அணி் தலைவர் தென்னவன், நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பூர்ணசங்கீதா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், துணை அமைப்பாளர் சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பிளாசா ராஜேஸ்வரி சேகர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சீமான்சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×