search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள்‌ ஏலம்‌"

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு விற்பனைச்‌ சங்கத்தில்‌ பிரதிவாரம்‌ சனிக்கிழமை மஞ்சள்‌ ஏலம்‌ நடைபெற்று வருகிறது.
    • மஞ்சள்‌ ஏலம்‌ போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால்‌ ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்‌.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பிரதிவாரம் சனிக்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இன்று(சனிக்கிழமை) நடைபெற இருந்த மஞ்சள் ஏலம் போதிய கிடங்கு வசதி இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புது மஞ்சள் ஏலம் ஆரம்பித்த நாள் முதலே போதிய இடவசதி இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஏலம் நடைபெறுமா? இல்லையா? என போன் மூலம் கேட்டுக் தெரிந்த பிறகே மஞ்சள் கொண்டு வரவேண்டி உள்ளது. இந்த ஆண்டு மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்காத நிலையில் விற்பனை செய்வதும் கடினமாக உள்ளது. இந்த ஆண்டு திருச்செங்கோடு நகரின் பல பகுதிகளில் வாடகை கிடங்குகளிலேயே ஏலம் நடைபெறுகிறது.

    அதனால் கிடங்குகள் உள்ள இடங்களை கண்டு பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறோம். இதனால் லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. வாடகை கிடங்கு உள்ள இடங்களில் குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் இல்லை. இந்த சங்கத்திற்காக 2000-ம் ஆண்டு அரசால் சுமார் 5 ஏக்கர் நிலம் கைலாசம்பாளை யத்தில் வழங்கப்பட்டு இதுவரை அந்த இடத்தில் கிடங்குகளோ, களமோ கட்ட சங்கத்தால் எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளப் படவில்லை.

    அங்கு கிடங்கு கட்டினால் வாடகை கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏதும் இருக்காது. இதற்கு கூட்டுறவு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கிடங்குகள் கட்ட வேண்டும்.

    விவசாயிகளின் நியாய மான கோரிக்கைகளை சங்கம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் கலந்து பேசி மாவட்ட கலெக்டரிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×