search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் எழுத்து தேர்வு"

    • மதுரை-12 மையங்களில் போலீஸ் எழுத்து தேர்வு; 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
    • தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.



    தேர்வர்களின் செல்போன்களை ேபாலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.(இடம்: அமெரிக்கன் கல்லூரி).

     .............

    மதுரை

    தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணியிடங்க ளுக்கான உடல் தகுதி தேர்வு, சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது.

    இதற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, திருப்பரங்குன்றம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 பகுதிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு 11 ஆயிரத்து 500 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள். எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி விண்ணப்ப தாரர்கள் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வந்து விட்டனர். அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையத்துக்குள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, நுழைவுசீட்டு தவிர வேறு எந்த பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. விண்ணப்பதாரர்கள் கொண்டு வந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு சென்றனர்.

    மதுரை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு நடக்கும் 12 மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    திருமங்கலம் வி.கே.என். மேல்நிலைப்பள்ளி, கள்ளிக்குடி தனியார் பொறியியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களிலும் இன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு மையத்தை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • மதுரையில் நாளை போலீஸ் எழுத்து தேர்வை 11 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தின் 12 தேர்வு மையங்களிலும், 1200 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் 2022 பணியிடங்களுக்கான 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வு சில வாரங்களுக்கு முன்பு நடந்தது. நாளை (26-ந் தேதி) எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மதுரை மாவட்டத்தில் 12 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    இங்கு 11 ஆயிரத்து 500 பேர் எழுத்து தேர்வை எழுதுகின்றனர். இதில் 6,926 பேர் ஆண்கள், 4,572 பேர் பெண்கள், 2 பேர் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கு நுழைவுசீட்டு பெற்றவர்கள் குறித்த நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும். கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனா, நுழைவுசீட்டு, எழுத்து அட்டை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்க்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த பொருட்களை தேர்வு மையத்திற்கு வெளியில் ஒப்படைத்து விட்டு, பரீட்சை முடிந்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நாளை நடைபெறும் காவலர் எழுத்து தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் தலைமையில் துணை கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    ×