search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மாத்திரை விற்பனை"

    • தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • விசாரணையில் அவர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

    ஈரோடு:

    தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்ப னையைத் தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதனடிப்படையில் ஈரோடு மதுவிலக்கு போலீ சா ர் ஈரோடு, கோட்டை பத்ரகா ளியம்மன் கோயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் ஈரோடு, கருங்கல்பாளை யம், ராஜா ஜிபுரம், ராஜூ மகன் பசுபதி (23), காஞ்சிகோயில், காமராஜ் நகர், பழனிசாமி மகன் ராஜா (23), ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தர் சாலை, லியாகத் அலி மகள் சமீம் பானு (22), ஈரோடு, மாணி க்கம்பாளையம், நேதாஜி நகர், மாணிக்கம் மகள் சந்தியா (22), ஈரோடு வீரப்பன்சத்தி ரத்தை சேர்ந்த டார்ஜன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும், அவர்கள் 49 வலி நிவாரணி மாத்தி ரைகள், சிரிஞ்சுடன் கூடிய ஊசிகள் 2 வைத்திருந்ததும் கண்டுபி டிக்கப்பட்டது.

    விசாரணையில் அவ ர்கள், போதைக்காக வலி நிவாரணி மாத்திரை களை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடலில் செலுத்த விற்பனைக்கு வை த்தி–ருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதில், பசுபதி, சமீம் பானு ஆகியோர் ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி ய–தாகவும், விற்பனை செய்ததாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கூடுவாஞ்சேரி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீரான் (52) அசோக்குமார் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் எடை உள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு போதை மாத்திரை எப்படி கிடைத்தது, அவர்களுடன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்காணிப்பதோடு, அவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே போதை பொருள் விற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    போதை மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கண்காணிப்பதோடு, அவர்களை கைது செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கோவை மாநகரில் இதுவரை போதை மாத்திரைகளை விற்றதாக 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை கோவில்மேடு அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு போதை மாத்திரை பொடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த இடையர்பாளையம் அருகே உள்ள பாரி நகரை சேர்ந்த சரவணகுமார்(வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் போதை மாத்திரை பொடியை பறிமுதல் செய்தனர். இந்த போதை மாத்திரை பொடி வலி நிவாரணிக்கு பயன்படுத்துவது என்பது தெரியவந்தது.

    சரவணக்குமார் உணவு பார்சல் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. மேலும் அங்கு வேலை பார்த்து கொண்டே, போதை மாத்திரைகளை பொடியாக்கி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போதை மாத்திரை பொடிகளை எங்கிருந்து வாங்கி வந்தீர்கள். இதன் பின்னால் யாரெல்லாம் உள்ளார்கள் என விசாரித்தனர். அப்போது அவர் கோவையில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பல்கள் குறித்து பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகி றது.அதனை வைத்து போலீசார் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்க ளை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×