search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஒழிப்பு விழிப்புணர்வு"

    • போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
    • ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.

    உடுமலை :

    உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம்உடுமலை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் தலைமை வகித்தார். புகையிலை மற்றும் போதையினால் ஏற்படும் இன்னல்களை எடுத்துக் கூறி அவற்றை கைவிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என கூறினார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண்1 நீதிபதி விஜயகுமார் மற்றும் எண் 2 நீதிபதி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புகையிலை மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு உரையை மித்ரா மற்றும் சூர்யா ஆகியோர் மக்களுக்கு எடுத்துக்கூறினர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர்.
    • பாிசுக்கோப்பைகளை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் .

    மங்கலம் :

    மங்கலம் காவல் நிலையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கபாடி போட்டியானது மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியில் மங்கலம் -அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ ,மாணவிகள் 14 அணிகளாக பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாிசுக்கோப்பை , பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார் . இதில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வகுமார் ,செந்தில்,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் பைசல்ராஜா மற்றும் ஆசிரியர்கள், மாணவ ,மாணவிகள் மங்கலம் போலீசார் கலந்து கொண்டனர்.

    ×