search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேருராட்சி"

    • மழைநீர் செல்ல புதிய குழாய் பதித்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருராட்சி மன்ற கூட்டம் சேர்மன் ஷாஜஹான் தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலை வகித்தார். ஊழியர் ராஜேஸ் வரவேற்றார்.

    கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

    மோகன்தாஸ் (7-வது வார்டு திமுக கவுன்சிலர்)

    சொத்துவரி, குடிநீர் வரி எவ்வாறு வசூலிக்கப்படுகிறது.இதர வருவாய் இனங்கள் குறித்த இணைப்பு வைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து கவுன்சிலர்களுக்கும் தெரியவரும்.

    சேர்மன்:- தண்ணீர் வரி மாதந்தோறும் வசூலிக்கப்படுகிறது.

    மோகன்தாஸ் (7வது வர்ர்டு):- பிளான்அப்ரூவல் எவ்வாறு வசூலிக்கப்ப டுகிறது?

    சேகர் (10-வது வார்டு):- பஸ் நிலைய கடைகள் எப்போது ஏலம் விடப்படும். சேர்மன்:- அதிகாரிகளின் காலத்தில் போர்டு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இப்போது 18 மாதங்கள்தான் முடிந்த நிலையில் மீதி 18 மாதங்கள் முடிந்தபின்பு முடிவு செய்யப்படும்.

    மோகன்தாஸ் (7வது வார்டு):- சங்கராண்டி ஊரணிக்கு மழைநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களை மிரட்டுகிறது. உடைந்த குழாயை அகற்றி உடனடியாக புதிய குழாய் பதித்து அங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

    சேகர் (10 வது வார்டு கவுன்சிலர்):- பிரேத பரிசோதனை கூடம் குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? (சேர்மன்):- பேரூராட்சி 6-வது சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது.

    உம்முதர்தா (12-வது வார்டு):- எங்கள் பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும். மோகன்தாஸ் (7-வது வார்டு):- கீழரதவீதியில் வாறுகால் அமைத்து கொடுக்க வேண்டும். காவிரி குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமலட்சுமி:- மழைநீர் தேங்கியுள்ளதை அகற்ற வேண்டும்.

    பார்வதி:- கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

      திருவட்டார், ஜூன்.12-

      குலசேகரம் பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட கல்வெட்டான்குழி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை போன்ற இடங்களில் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

      இதனை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஜேம்ஸ், துணைத் தலைவர் ஜோஸ் எட்வர்ட், வார்டு கவுண்சிலர்கள் சுபாஷ் கென்னடி, ராகிலாபீவி, ரபீக்காபீவி, மேரி ஸ்டெல்லா, ரெத்தினபாய், லதாபாய், ஏஞ்சல்ஜெனி மற்றும் பேரூராட்சி தூய்மை பணிகளில் பலர் கலந்து கொண்டு புல்வெட்டி தூய்மை படுத்தினார்கள்.

      • நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
      • அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும்.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி.

      திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த அருவிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் குளி த்துச் செல்கின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்து வருவதால் பாது காப்பு வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

      முக்கியமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை விரிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், மற்றும் அதிகாரிகள் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

      இது குறித்து பேருராட்சி தலைவர் பொன் ரவி நிருபர்களிடம் கூறிய தாவது:-

      திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. அவர்களது வாகனங்களை நிறுத்தும் இடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு உள்ளது எனவே கூடுதல் இடம் ஏற்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டு உள்ளது.

      இதற்காக அருவியின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலங்களை கண்ட றியும் முயற்சியில் பேருராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது சில இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளோம்.விரைவில் வாகனங்கள் நிறுத்துவதற்க்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

      ×