search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் பலி"

    • மாரடைப்பு ஏற்பட்டு அன்விதா உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • டாக்டர் அன்விதாவின் தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

    சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியில் வசித்து வந்தவர் அன்விதா. 24 வயதே ஆன இளம் டாக்டரான இவர் தனது உடலை சீராக வைத்திருப்பதற்காக அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல உடற் பயிற்சி கூடத்துக்கு சென்ற டாக்டர் அன்விதா உடற் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இரவு 7.30 மணி அளவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடிச் சென்று அன்விதாவை பார்த்தனர். அப்போது அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அன்விதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் மயக்க நிலையிலேயே அன்விதாவின் உயிர் பிரிந்தது.

    உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அன்விதா உயிரிழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இயற்கை மரணம் என்று டாக்டர்கள் சான்றிதழ்கள் அளித்ததையடுத்து அன்விதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்றுக் கொண்டு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு அடக்கம் செய்தனர்.

    இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் கூறும்போது, 'பெண் டாக்டரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்பதால் போலீஸ் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உடலையும், உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த டாக்டர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் தோழிகள் இடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    டாக்டர் அன்விதாவின் தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மகளை டாக்ட ராக்கி அழகு பார்த்த அவரும் மகளின் திடீர் மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர்.

    சமீப காலமாகவே இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில் டாக்டர் அன்விதாவின் உயிரிழப்பும் மாரடைப்பால் நிகழ்ந்துள்ளது.

    • மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
    • மினி வெட்டிக்கல் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர்.

    ஹூஸ்டன்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ராமமங்கலத்தை சேர்ந்தவர் மினி வெட்டிக்கல் (வயது 52).

    மினி வெட்டிக்கல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருந்தார்.

    சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மினி வெட்டிக்கல் வந்த கார் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் மினி வெட்டிக்கல் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மினி வெட்டிக்கல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    மேலும் அவர் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர். பலியான மினி வெட்டிக்கல்லுக்கு திருமணமாகி கணவரும் குழந்தைகளும் உள்ளனர்.

    மினி வெட்டிக்கல் இறந்தது பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது, மினி வெட்டிக்கல் சிறந்த நடன கலைஞர் என்றும், சமூக பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்தனர்.

    ×