search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரா கிவிட்டோவா"

    ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். #USOpen
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்டை நடத்தினர்.



    இதில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் தரவரிசையில் இடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.

    பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இருந்த சிமோனா ஹாலெப் இரண்டு இடங்கள் சரிந்து 3-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். #AUSOpen
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    2-வது அரையிறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்)- 7-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினார்கள்.



    முதல் செட்டை ஒசாகா 6-2 என எளிதில் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2-வது செட்டை பிளிஸ்கோவா 6-4 என  அதிரடியாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஒசாகா கை ஓங்கியது. அவர் 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றி பிளிஸ்கோவாவை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    இந்திய நேரப்படி நாளை மதியம் 2 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா - பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    எட்ஜ்பாஸ்டன் பிரியாரி கிளப்பில் நடைபெற்று வந்த பர்மிங்காமல் ஒபன் டென்னிஸ் தொடரில் கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #Kvitova
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பெண்களுக்கான பர்மிங்காமல் ஒபன் டென்னிஸ் தொடர் எட்ஜ்பாஸ்டன் பிரியோரி கிளப்பில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ஸ்லோவாகியாவின் மக்டலேனா ரிபாரிகோவாவை எதிர்கொண்டார்.

    இதில் 4-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவிற்கு தரநிலை பெறாத மக்டலேனா ரிபாரிகோவா முதல் செட்டில் அதிர்ச்சி அளித்தார். மக்டலேனே ரிபாரிகோவை 6-4 என முதல் செட்டை அசத்தலாக வென்றார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றி கிவிட்டோவிற்கு விம்பிள்டன் தொடரில் சாதிக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.



    கடந்த மூன்று தொடரில் கிவிட்டோவா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது 6 மாதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 37 போட்களில் வெற்றி பெற்றுள்ளார். 
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #MadridOpen
    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இந்த தொடருக்கான தரவரிசை பெறாத கிகி 10-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்’ வரை சென்றது. இறுதியில் கஷ்டப்பட்டு கிவிட்டோவா 7(8) - 6(6) என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார்.



    2-வது செட்டை இழந்த கிவிட்டோவா சுதாரித்துக் கொண்டு சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆக்ரோஷமான விளையாடி 6-3 என கைப்பற்றினார். கிகி பெர்டென்ஸை 2-1 என வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கிவிட்டோவா.

    ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் தியெம் - ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    ×