என் மலர்

  செய்திகள்

  பர்மிங்காம் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்
  X

  பர்மிங்காம் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எட்ஜ்பாஸ்டன் பிரியாரி கிளப்பில் நடைபெற்று வந்த பர்மிங்காமல் ஒபன் டென்னிஸ் தொடரில் கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #Kvitova
  விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டாக கருதப்படும் பெண்களுக்கான பர்மிங்காமல் ஒபன் டென்னிஸ் தொடர் எட்ஜ்பாஸ்டன் பிரியோரி கிளப்பில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, ஸ்லோவாகியாவின் மக்டலேனா ரிபாரிகோவாவை எதிர்கொண்டார்.

  இதில் 4-ம் நிலை வீராங்கனையான கிவிட்டோவிற்கு தரநிலை பெறாத மக்டலேனா ரிபாரிகோவா முதல் செட்டில் அதிர்ச்சி அளித்தார். மக்டலேனே ரிபாரிகோவை 6-4 என முதல் செட்டை அசத்தலாக வென்றார்.

  பின்னர் சுதாரித்துக் கொண்ட கிவிட்டோவா 2-வது செட்டை 6-1 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றி கிவிட்டோவிற்கு விம்பிள்டன் தொடரில் சாதிக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.  கடந்த மூன்று தொடரில் கிவிட்டோவா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது 6 மாதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 37 போட்களில் வெற்றி பெற்றுள்ளார். 
  Next Story
  ×