என் மலர்

  செய்திகள்

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்
  X

  மாட்ரிட் ஓபன் டென்னிஸ்- பெட்ரா கிவிட்டோவா சாம்பியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார். #MadridOpen
  மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்று நடைபெற்றது. இதில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

  இந்த தொடருக்கான தரவரிசை பெறாத கிகி 10-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் முதல் செட் ‘டை பிரேக்’ வரை சென்றது. இறுதியில் கஷ்டப்பட்டு கிவிட்டோவா 7(8) - 6(6) என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை 4-6 என இழந்தார்.  2-வது செட்டை இழந்த கிவிட்டோவா சுதாரித்துக் கொண்டு சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆக்ரோஷமான விளையாடி 6-3 என கைப்பற்றினார். கிகி பெர்டென்ஸை 2-1 என வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கிவிட்டோவா.

  ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் தியெம் - ஸ்வெரேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  Next Story
  ×